சென்னை: 'லஞ்சம் வாங்காதீர்கள்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொது மக்களின் காலில் விழுந்து 'சத்தியாகிரக இயக்கத்தை' சேர்ந்த இளைஞர்கள் நூதன முறையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகில் இளைஞர்கள் சிலர் பொது மக்களின் காலில் விழுந்து லஞ்சம் கொடுக்காதீர்கள், லஞ்சம் வாங்காதீர்கள் என்று துண்டு பிரசுரங்களை வினியோகித்தப்படி காலில் விழுந்தனர்.
ஆண், பெண் , வயது வித்தியாசம் பார்க்காமல் அவர்கள் பொது இடத்தில் மக்கள் காலில் விழுந்தனர்.
இது குறித்து அந்த இளைஞர்கள் கூறுகையில், நாட்டில் வன்முறை , லஞ்சம், சாதி உணர்வு போன்றவற்றை ஒழித்திடவும், நாட்டுப்பற்றை வளர்க்கவும், 2015ம் ஆண்டில் இந்தியாவை வல்லரசாக்கவும், அதற்காக மக்களை ஒருங்கிணைக்கவும், பொது மக்கள் காலில் விழுந்து இந்தியாவெங்கும் இந்த சத்தியாகிரக இயக்க்ததை நடத்தி வருகிறோம் என்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த இயக்கம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.