சென்னை விமான நிலையத்தில் அதிநவீன ராடார் கருவி அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம், குளிர்காலத்தில் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்படும் நிலை இனி ஏற்படாது.

இந்தியாவை பொறுத்த வரையில் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் விமானப் பயணிகளுக்கு சோதனைக் காலமாகும். பனிமூட்டம், மோசமான வானிலை காரணமாக விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் கடும் சிக்கல் ஏற்படும். இதனால், அருகில் உள்ள மற்ற விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். பனிமூட்டத்தால் பல விமானங்கள் ரத்து செய்யப்படும். இது காலம், காலமாக நடந்து வரும் சம்பவமாகும். இதிலிருந்து சென்னை விமான நிலையம் மட்டும் விதிவிலக்காக மாற உள்ளது.
மேலை நாடுகளைப் பொருத்தவரையில், பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இதற்கு காரணம், அங்குள்ள விமான நிலையங்களில் ‘சர்பேஸ் மூவ்மென்ட் கைட்னஸ் கன்ட்ரோல் சிஸ்டம்’ என்ற அதிநவீன கருவி அமைக்கப்பட்டிருக்கும். இந்த கருவியை, இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை விமான நிலையத்தில் அமைக்க விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அனுமதியும் கிடைத்து விட்டது.
‘சர்பேஸ் மூவ்மென்ட் கைட்னஸ் கன்ட்ரோல் சிஸ்டம்’ என்பது, தரைவழிப் போக்குவரத்தை கண்காணிக்கும் ஒரு அதிநவீன ராடார். இந்த கருவி விமான ஓடுபாதையில் அமைக்கப்படும். பிறகு, விமான கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து கருவி இயக்கப்படும். தற்போது, ஓடுபாதையில் பனிமூட்டம் தென்பாட்டாலே, விமானத்தை இயக்க முடியாது என்று அறிவிக்கப்படுகிறது. விமானம் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
ஆனால், சர்பேஸ் ராடார் கருவி பொருத்தப்பட்ட பின்பு, சுமார் 100 மீட்டர் தூரம் வரை ஓடுபாதையில் எவ்வளவு பனிமூட்டம் இருந்தாலும், பனியின் அடர்த்தி என்ன என்பதை அறிந்து, அதையும் ஊடுருவி ஓடுபாதை தெளிவாக தெரிவதற்கு வழிவகுக்க முடியும். எனவே, பனிமூட்டம் காரணமாக விமானம் புறப்படுவது, தரையிறங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
சர்பேஸ் ராடார் கருவி இங்கிலாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதன் விலை சுமார் ரூ.5 கோடியாகும். இதை, சென்னை விமான நிலையத்தில் அமைக்கும் பணி வரும் ஜூன் மாதம் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால், வரும் மழைக்காலம், குளிர்காலத்தில் எவ்வளவு பனிமூட்டம் இருந்தாலும், மேலை நாடுகளைப் போல சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்காது என்று விமான நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நவீன காலத்துக்கு ஏற்றாற்போல், சென்னை விமான நிலையம் அதிநவீன மயமாக்கப்பட்டு வருவது பயணிகளுக்கும், விமான நிறுவனங்களுக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கூடுதல் பாதுகாப்பு வசதி
‘சர்பேஸ் மூவ்மென்ட் கைட்னஸ் கன்ட்ரோல் சிஸ்டம்’ கருவி பனிமூட்டத்தை கட்டுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், கூடுதல் பாதுகாப்பு வசதியையும் ஏற்படுத்தக்கூடியது. இந்த கருவி மூலம், விமானத்தில் ஏற்றப்படும் பொருட்களில் என்ன இருக்கிறது, ஆபத்தான, அபாயகரமான பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை கண்காணிக்க முடியும். இதனால், விமானத்துக்கும், விமான பயணிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே முதல் முறையாக அமைக்கப்படுகிறது

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget