ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களான நடிகை ஷில்பா ஷெட்டி, லலித் மோடி ஆகியோரின் நெருங்கிய உறவினர்கள் அன்னிய செலாவணி விதிமுறைகளை மீறி இருப்பதாக, வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். தலைவர் லலித்மோடிக்கு எதிரான ஊழல் புகார்களை தொடர்ந்து, அவரை பதவி நீக்கம் செய்துள்ளது பிசிசிஐ.
ஆனால் மோடியின் விசுவாசிகளான ஷாரூக்கான், ப்ரீத்தி ஜிந்தா மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோர் லலித் மோடிக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.
லலித் மோடி மூலம் நேரடியாக பல கோடி ரூபாய் ஆதாயம் அடைந்தவர்கள் இம்மூவரும் என்று, மோடியின் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஷில்பா ஷெட்டி மூலம் முதலீடு செய்யப்பட்ட பணம் பெரும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் அணியின் பினாமி உரிமையாளர் ஷில்பா என்றும் ஐபிஎல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதே அணிக்கு லலித் மோடியின் நெருங்கிய உறவினரும் முக்கிய பங்குதாரராக உள்ளார்.
இந்த நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் லலித்மோடியின் நெருங்கிய உறவினர் இருவருமே அன்னிய செலாவணி விதிமுறைகளை மீறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜெய்ப்பூர் ஐ.பி.எல். பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இது, மொரீஷியஸ் நாட்டில் செயல்பட்டு வரும் இ எம் ஸ்போர்ட்டிங் ஹோல்டிங் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
இந்த மொரீஷியஸ் நிறுவனத்தில், லலித்மோடியின் மைத்துனர் சுரேஷ் செல்லாராம் என்பவருக்கு இங்கிலாந்தின் வர்ஜின் தீவு நிறுவனத்தின் மூலமாக 44.15 சதவீத பங்குகள் உள்ளன. மோடிக்கு நெருக்கமான இங்கிலாந்தில் உள்ள மனோஜ் படாலேவுக்கு 32.4 சதவீத பங்குகள் உள்ளன.
பிரபல டி.வி. அதிபர் ராபர்ட் முர்டோக்கின் மகனுக்கு 11.7 சதவீத பங்குகளும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் வழி உறவினர்களுக்கு 11.7 சதவீத பங்குகளும் இருப்பது வருமானவரி சோதனையில் தெரிய வந்துள்ளது.
மொரீஷியஸ் நாட்டில் வருமானவரி செலுத்த வேண்டியது இல்லை என்பதால், அங்குள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிறுவனம் மூலம் பெரிய அளவில் அன்னிய செலாவணி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
இது தொடர்பாக ஏற்கெனவே ஷில்பா ஷெட்டிக்கு விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல் அணியின் பினாமி உரிமையாளர் ஷில்பா என்பதை நிரூபிக்கும் வேலையிலும் தீவிரமாக உள்ளது மத்திய அமலாக்கப் பிரிவு.

வால் பையன் கமெண்ட் : இவங்க ரொம்ப நல்லவங்க?

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget