உலக கோப்பை கால்பந்து போட்டி தென் ஆப்ரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சாக்கர் சிட்டி ஸ்டேடியத்தில், வண்ணமயமான கலைநிகழ்ச்சியுடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி, இந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. மொத்தம் 204 நாடுகளின் அணிகள் பங்கேற்ற தகுதிச் சுற்றின் முடிவில், உலக கோப்பையில் விளையாட 32 அணிகள் தகுதி பெற்றன. இந்த அணிகள் மோதும் பிரதான சுற்று, தென் ஆப்ரிக்காவில் நேற்று தொடங்கியது.
பரிசு மழை:
உலக கோப்பையைக் கைப்பற்றும் அணிக்கு முதல் பரிசாக ரூ.138 கோடி வழங்கப்பட உள்ளது. இந்த உலக கோப்பையில் வழங்கப்பட உள்ள மொத்தப் பரிசுத் தொகை ரூ.2,000 கோடி. இப்போட்டி ஜூலை 11ம் தேதி வரை நடக்க உள்ளது.
தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள சாக்கர் சிட்டி ஸ்டேடியத்தில் தொடக்க விழா நடைபெற்றது.
தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா, ஐ.நா. பொதுச் செயலர் பான்கி மூன், மெக்சிகோ அதிபர் பெலிப் கால்டரான், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் செப் பிளாட்டர் உட்பட அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், பிபா நிர்வாகிகள் பலர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
சாம்பியன்கள் இதுவரை.... ஆண்டு சாம்பியன் 2வது இடம் நடத்திய நாடு
1930 உருகுவே அர்ஜென்டினா உருகுவே
1934 இத்தாலி செக்கோஸ்லோவேகியா இத்தாலி
1938 இத்தாலி ஹங்கேரி பிரான்ஸ்
1950 உருகுவே பிரேசில் பிரேசில்
1954 மேற்குஜெர்மனி ஹங்கேரி சுவிட்சர்லாந்து
1958 பிரேசில் ஸ்வீடன் ஸ்வீடன்
1962 பிரேசில் செக்கோஸ்லோவேகியா சிலி
1966 இங்கிலாந்து மேற்கு ஜெர்மனி இங்கிலாந்து
1970 பிரேசில் இத்தாலி மெக்சிகோ
1974 மேற்கு ஜெர்மனி நெதர்லாந்து மேற்கு ஜெர்மனி
1978 அர்ஜென்டினா நெதர்லாந்து அர்ஜென்டினா
1982 இத்தாலி மேற்கு ஜெர்மனி ஸ்பெயின்
1986 அர்ஜென்டினா மேற்கு ஜெர்மனி மெக்சிகோ
1990 மேற்கு ஜெர்மனி அர்ஜென்டினா இத்தாலி
1994 பிரேசில் இத்தாலி அமெரிக்கா
1998 பிரான்ஸ் பிரேசில் பிரான்ஸ்
2002 பிரேசில் ஜெர்மனி தென் கொரியா
2006 இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி