சுமார் 3,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாபெரும் பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்தது. அதாவது ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் என்ற நாட்டின் பரப்பளவுக்கு சமமான பனிமலைச் சிகரம் மெர்ட்ஸ் என்ற மிகப்பெரிய பனிமலையிலிருந்து பெயர்ந்து விழுந்துள்ளது.இதனால் கடல் நீர் சுழற்சியில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பி9பி (B9B) என்று அழைக்கப்படும் மற்றொரு பனிமலை மெர்ட்ஸ் பனிமலை மீது மோதியதில் பல பில்லியன் டன் நிறையுள்ள, நினைத்துப் பார்க்க முடியாத பரப்பளவிலான பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்துள்ளது.கிழக்கு அண்டார்டிக்காவிலிருந்து தெற்குக் கடலில் இந்த பனிமலை பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த இரண்டு பனிமலைகளும் தற்போது அடுத்தடுத்து அண்டார்டிகாவில் மிதந்து வருகிறது என்று ஆஸ்ட்ரேலிய அண்டார்டிகா ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.இந்த மிகப்பெரிய பனிமலையில் ஒரு ஆண்டிற்கு உலகில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு நாடுகளுக்கு தண்ணீர் அளிக்கக் கூடியது என்று அவர் மேலும் கூறினார்.இதனால் ஐரோப்பாவில் பனிப்பொழிவு நாட்களும், பனிப்பொழிவு அளவும் அதிகரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வு இயற்கையான நிகழ்வுதான் என்றாலும் இதன் நீண்ட கால தாக்கம் பற்றி நாம் கவலையடையாமல் இருக்க முடியாது என்று கிரின்பீஸ் ஆய்வுச் சோதனை மைய விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.இந்த பனிமலை உடைந்து விழுந்த அண்டார்டிகா கடல் பகுதியில் கடல்பனி அவ்வளவாக இல்லாத ஒரு இடமாகும். இதனால் இங்கு வாழும் உயிரினங்கள் உணவிற்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.இந்தப் பனிமலை உடைந்து விழுந்த இடம் குளிர்ந்த, அடர்த்தியான பிராண வாயு நிரம்பிய நீர் உருவாகும் இடமாகும். இது கடல்தரைக்குச் சென்று ஆழ்கடலை பிராண வாயு நிரம்பிய ஒன்றாக மாற்றும்.இப்போது இந்தப் பனிமலை உடைந்து அண்டார்டிகாவில் விழுந்தது, மேற்கூறிய பிராண வாயு உருவாக்க நடவடிக்கையில் தாக்கம் ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் என்னவென்று இப்பொது கூற முடியாது என்று அந்த விஞ்ஞானி தெரிவித்தார்


புவி வெப்பமடைதலால் கடல்களின் சில பகுதிகளில் நீர் உவர்மயமாகிறது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.ஆஸ்ட்ரேலிய விஞ்ஞானிகள் இத்தகைய ஆய்வில் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 60 ஆண்டுகளாக கடலின் மேற்பரப்பு நீர் மட்டுமல்லாது, அடியாழ நீரும் உப்புமயமாகி வருகிறது என்று கண்டுபிடித்துள்ள இந்த ஆய்வுக்குழுவினர், இது புவி வெப்பமடைதலால் ஏற்படும் மாற்றம் என்று தெரிவித்துள்ளனர்.கடல் நீரின் உவர்த் தன்மை பூமியில் பொழியும் மழையின் அளவு மற்றும் ஆவியாதல் நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. புவி வெப்பமடைதலால் ஏற்படும் அதிதீவிர வானிலை மாற்றங்கள் கடலின் சிலபகுதிகளை உவர் மயமாகவும் மற்றும் சில பகுதிகளில் நீரை உவரற்றதாகவும் செய்து வருகிறது என்று பால் டியூரக் என்ற ஆஸ்ட்ரேலிய விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.கடலின் ஒரு பகுதியில் நீர் அதிகமாக ஆவியாகிறது என்றால் அப்பகுதியில் உப்புமயமாகிறது. ஆனால் அதிக மழை உள்ள பகுதிகளில் நீரின் உப்புத் தன்மைகுறைந்து அது சாதாரண நீராக மாறி வருகிறது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.கடல் நீரின் மேற்பரப்பு உவர் மயமாகும் சாத்தியம் மேலும் அதிகரிக்கும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.வெப்பப் பகுதிகளில் உள்ள அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் நீர் மேலும் உவர்மயமாகும் சாத்தியங்கள் தென் படுகிறது என்று கூறும் இந்த ஆய்வு மழை அதிகம் பொழியும் பகுதிகளில் கடல் நீர் தெளிவான நீராக மாறுகிறது என்று கூறுகின்றனர்.இதில் மர்மம் என்னவெனில் கடலின் மேற்பரப்பு நீர் அதிகம் ஆவியாவதால் அப்பகுதி நீர் உவர் மயமாவதில் ஒரு தர்க்க ரீதியான காரணம் உள்ளது. ஆனால் கடலின் அடியாழப்பகுதிகளில் உள்ள நீரும் உவர் மயமாகிவருவது குறித்து இன்னும் ஆய்வுகள் தேவை என்று டிஸ்கவரி சானல் தெரிவித்துள்ளது.











இந்தியா - சீனா ஆகிய நாடுகளின் வளர்ச்சி இதர நாடுகளுக்கு உதவுவதாக உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.வாஷிங்டனில் உலக வங்கியின் புதிய அறிக்கையை இன்று செய்தியாளர்களிடம் வெளியிட்டு பேசுகையில் இதனை தெரிவித்த அந்த அறிக்கையை எழுதிய டெல்ஃபின், மேலும் கூறியதாவது: உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிக்கு தடையாக அமைந்துவிட்டது. ஆனால் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அபார வளர்ச்சியால் 2015 க்குள் வறுமையை ஒழிக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.


அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் அதிகார துஷ்பிரயோகம், சூதாட்டம், மேட்ச் பிக்சிங், ஏல மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நிலையில், ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம், மும்பையில் நாளை மறுநாள் நடக்கிறது. இதில் லலித் மோடி மீதான நடவடிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. அணிகளை ஏலம் விட்டதில் நடந்துள்ள மோசடிகள் குறித்து விசாரிக்க மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
ஐபிஎல் சர்ச்சையை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, “ஐபிஎல் மோசடி குறித்து கம்பெனிகள் விவகாரத்துறை, வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” என உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் 24 மணி நேரத்துக்குள் விவரங்களை அளிக்க வேண்டும் என கம்பெனி விவகாரங்கள் துறை கெடு விதித்தது. அணி உரிமையாளர்களின் அலுவலகங்கள், ஐபிஎல் கமிஷனர் அலுவலகம் மற்றும் பிசிசிஐ அலுவலகத்தில் வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஐபிஎல் அலுவலகத்தில் சோதனை செய்தபோது, வீடியோகான் மற்றும் அடானி குழுமத்தினர் அளித்திருந்த ஏல ஆவணங்கள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.
மத்திய அரசின் 3 துறையினரும் விசாரணையில் கிடைத்த தகவல்களை அறிக்கையாக தயாரித்து மத்திய அரசுக்கு சமர்ப்பித்தன. ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் பிக்சிங் நடந்திருக்கலாம் எனவும் 26 வீரர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
அண்மையில் கொச்சி மற்றும் புனே அணிகளுக்காக சென்னையில் நடந்த ஏலத்தில் மட்டும் அல்லாது, முதல்முறையாக 2008&ம் ஆண்டு நடந்த 8 அணிகளின் ஏலத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2008&ம் நடைபெற்ற ஏலத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மிகக் குறைந்த விலைக்கு ஏலம் போயின. இந்த இரண்டு அணிகளிலும் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடியின் உறவினருக்கு பங்கு இருக்கிறது. இதேபோல் மிகக் குறைந்த வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை ஷாருக்கான் வாங்கியுள்ளார். இவற்றில் மோடிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
மற்ற அணிகள் ஏல விஷயத்திலும், அணி உரிமையாளர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு ஏலத்தை குறைத்து கேட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கார்டெல் அமைத்து ஏலம் கேட்பது மத்திய அரசின் காம்படிஷன் ஆக்ட் 2002&ன் படி குற்றமாகும். இந்தக் கோணத்தில் விசாரணை நடத்த மத்திய அரசின் காம்படிஷன் கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ஐபிஎல் அணிகளில் டெக்கான் சார்ஜர்ஜ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய ஒரு சில அணிகள் தவிர மற்ற அணிகளின் உரிமையாளர்களுக்கு 60 சதவீத பங்குகளே சொந்தம் என்றும், மீதமுள்ள 40 சதவீத பங்குகள் நிழல் நிறுவனங்களுக்கு சொந்தம் என்றும் கூறப்படுகிறது. இவற்றில் வெளிநாடுகளில் பதுக்கப்பட் டிருக்கும் கறுப்பு பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் எனவும், இதன்மூலம் மோடிக்கு பெருத்த ஆதாயம் கிடைத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் மற்ற சர்ச்சைகளில் அதிக கவனம் செலுத்தாமல், ஏல மோசடிகளில் தீவிர கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் சர்ச்சையை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு விடுவது குறித்தும் மத்திய அரசு யோசித்து வருகிறது. இந்த சர்ச்சை குறித்து பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பி வருவதால் நாடாளுமன்ற குழு அமைப்பது குறித்து பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோர் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், மும்பையில் நாளை மறுநாள் (26&ம் தேதி) ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் நடக்கிறது. இதில், ஐபிஎல் கமிஷனர் பதவியில் இருந்து மோடி நீக்கப்படுவது உறுதி என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கூட்டத்தை 5 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என லலித்மோடி முன்வைத்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளது.
இதற்கிடையே, நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்ட பிசிசிஐக்கு அதிகாரம் இல்லை என்றும் பிசிசிஐ முடிவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்லப்போவதாகவும் அறிவித்திருந்த மோடி, அதிலிருந்து பின்வாங்கியுள்ளார். பிசிசிஐக்கு எதிராக கோர்ட்டுக்கு செல்லப்போவதில்லை என அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிசிசிஐக்கும் லலித்மோடிக்கும் இடையே சமரசம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. லலித் மோடிக்கு பதிலாக பிசிசிஐ தலைவர் மனோகர், ஐபிஎல்லின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வார் என்றும், லலித் மோடி தொடர்ந்து பிசிசிஐ துணைத் தலைவர் பதவியில் நீடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
அணிகள் ஏலத்தில் பல கோடி மோசடி
விசாரணை நடத்த மத்திய அரசு தீவிரம்









ஐபிஎல் 20&20 போட்டியில் மும்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் & ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறும் அணி சாம்பியன்லீக் கோப்பை 20&20 போட்டியில் விளையாட நேரடியாக தகுதிபெறும் என்பதால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
கடந்த வருடம் முதல் 2 இடங்களை பிடித்தவகையில் ஐதராபாத், பெங்களூர் அணிகள் சாம்பியன் லீக் போட்டியில் மோதின. ஆனால் இந்த வருடம் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து விட்டதால் 3வது இடத்திற்கான மோதலில் இரு அணிகளும் இன்று களமிறங்குகின்றன. இதில் வெற்றி பெறும் அணி மட்டுமே சாம்பியன்லீக் போட்டியில் மோத தகுதிபெறும்.இந்த சூழ்நிலையில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே லீக் போட்டியில் மோதியதில் 2 போட்டிகளிலும் ஐதராபாத் வென்றுள்ளது. எனவே அந்த ஆதிக்கத்தை இந்த ஆட்டத்திலும் செலுத்த விரும்பும். அதற்கு சைமண்ட்ஸ், கிப்ஸ், சுமன், ஓஜா, மார்ஷ் ஆகியோர் உதவுவர். பெங்களூர் அணியிலும் உத்தப்பா, காலிஸ், பிரவீன்குமார், விராட்ஹோக்லி, பீட்டர்சன், ஸ்டெய்ன், டெய்லர், வினய்குமார் ஆகியோர் உள்ளனர். எனவே இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக அமையும்.


ஐபிஎல் சர்ச்சை குறித்து இந்திய அணியின் கேப்டன் டோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:
நான் ஒரு போர் வீரன். எனது வேலை விளையாடுவது மட்டும்தான். முடிவெடுப்பது, கருத்து கூறுவது எனது வேலை அல்ல. ஒரு வீரராக எனது வேலை விளையாடுவது மட்டும்தான், வேறு ஒன்றுமில்லை. காயம் காரணமாக சேவாக்கை இழந்திருப்பது மிகப்பெரிய ஒன்று. காயம் ஏற்படுவது விளையாட்டின் ஒருபகுதி. ஆனால் முடிந்தவரைக்கும் தொடர்ச்சியாக இவ்வாறு கிரிக்கெட் விளையாடும் நாட்களில் தங்களுடைய உடல்நிலையை வீரர்கள் அதிக கவனத்துடன் பார்த்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். ஏனெனில் காயமடைந்துவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது கடினம்.
சேவாக் இடத்தை மற்ற வீரர்கள் நிரப்புவார்கள் என நம்புகிறேன்.


ஐஸ்லாந்தில் எரிமலை சீற்றம் குறைந்ததால், ஜெர்மனியில் இருந்து செல்லும் விமான போக்குவரத்து சீரடைந்துள்ளது. பிராங்பர்ட் நகருக்கு மேலே பல ஆயிரம் அடி உயரத்தில் செல்கிறது விமானம். பின்னணியில் அழகிய நிலா.


தீச் சகுனங்களை தடுத்து நிறுத்த மேல் நோக்கி செலுத்தும் அம்சமாகவோ உனது பேராற்றலை வெளிப்படுத்த செலுத்தப்படுவதகவோ அக்னியை பார்க்காதே .அது நெருப்பு இந்தியனின் இதய நெருப்பு, அது ஒரூ வெறும் ஏவுகனையன்று இந்த நாட்டின் எரியும் பெருமை .அதனால் தான் அதற்க்கு அத்தனை ஒளி. -HONOURABLE A.P.J.அப்துல் கலாம்
நமது தாயகத்தின் பெருமையை தலை நிமிர செய்த மேதை
நாட்டின் பாதுகாப்பிற்கு வானத்தில் வேலி கட்டியவர்
இந்த பாரத ரத்தினத்தின் அறிவியல் தவச்சாலையில்
பற்றி எரிந்த "அக்கினி" பிரபஞ்ச வீதியையே சூடற்றியது
தினசரி பதினெட்டு மணி நேரம் கண் விழித்து ஆய்ந்த போதும்
கை விரல்கள் என்னவோ வீணை மீட்ட தவறியதில்லை.
இவர் விஞ்ஞானி மட்டுமல்ல ஒரு சிறந்த கவியும் தான் .


இந்த பூமி அவனுடையது ,

எல்லையற்ற விசால வானங்களும் அவனுடையவை ,
கடல்கள் எல்லாம்,
அவனிடமே ஓய்வு கொள்கின்றன ,
என்றாலும் அவன் சின்ன நீர்க்குட்டையில் படுத்திரிக்கிறான் .
-அதர்வணவேதம் 4வது பாகம்


பங்குச் சந்தைகளில் இன்று மாற்றம் ஏற்பட்டது. சென்செக்ஸ் 77, நிஃப்டி 22 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. பங்குச் சந்தைகளில் நேற்று அதிக மாற்றத்துடன் இருந்தது. ஆனால் இறுதியில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இன்றும் பங்குச் சந்தை அதிக மாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. காலை 9.25 மணியளவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 86.79 புள்ளிகள் (BSE-sensex) அதிகரித்து, குறியீட்டு எண் 17,660.78 ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 21.15 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 5290.50 ஆக உயர்ந்தது. மிட்கேப் 38.69, சுமால்கேப் 74.64, பிஎஸ்இ-500 28.54 புள்ளிகள் அதிகரித்தன. காலை 9.28 மணியளவில் 1140 பங்குகளின் விலை அதிகரித்தது. 509 பங்குகளின் விலை குறைந்தது. 58 பங்குகளின் விலை மாற்றமில்லை. காலையில் உலோகம், அதிவேக நுகர்வோர் விற்பனை பொருட்கள், மின்சாரம், மருத்துவ துறை பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தது. மற்ற பிரிவு குறியீட்டு எண் சிறிது அதிகரித்தது.
பங்கு சந்தை ஊசலாட்டமாக இருப்பதால் முதலிட்டார்கள் கவனமாக செயல்படவும்.
நேற்றை போலவே இன்றும் வெள்ளி கிழமை சந்தை ஊசலாட்டமாகவே இருந்ததது .அடுத்த வாரம் சந்தை இன்னும் ஐம்பது புள்ளிகள் வரை உயரவோ அல்லது சரியாவோ வாய்ப்புள்ளது .



மும்பை: போலிங்கரின் அபாரமான பந்து வீச்சில் சிக்கிச் சிதைந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெற்றி இலக்கை எட்ட முடியாமல் சுருண்டு தோல்வியைச் சந்தித்து ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது.38 ரன்கள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பை இநதியன்ஸை அது சந்திக்கிறது.நவி மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 2வது அரை இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் அதிரடி பந்து வீச்சீல் சிதறிய டெக்கான் சார்ஜர்ஸ் எழுந்திருக்கவே முடியாமல் போய் 19.2 ஓவர்களில் 104 ரன்களை மட்டும் எடுத்துச் சுருண்டு போனது. இதனால் 3வது தொடரிலும் சாம்பியன் பட்டத்தைப் பெறும் அதன் கனவு தகர்ந்து போனது.முன்னதாக முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் டெக்கானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிப் போனது. இருப்பினும் கேப்டன் டோணி மற்றும் பத்ரிநாத்தின் சிறப்பான, பொறுப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 142 என்ற கெளரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது.கேப்டன் டோணி 30 ரன்களும், பத்ரிநாத் போராடி 37 ரன்களையும் எடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய், மாத்யூ ஹெய்டன், சுரேஷ் ரெய்னா ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால் சென்னையின் நிலை கேள்விக்குறியானது.கடைசி ஓவர்கள் அடித்து ஆட வீரர்கள் இல்லாத நிலையில் சென்னை இருந்தது. இருப்பினும் அனிருத்தா ஸ்ரீகாந்த் விளாசிய சில அருமையான ஷாட்களால் ஸ்கோர் 140 ரன்களைத் தாண்ட உதவியது. 15 பந்துகளில் 24 ரன்களை விளாசினார் ஸ்ரீகாந்த்.சென்னை அணியின் முதுகெலும்பை முறித்தவர் ரியான் ஹாரிஸ். 3 விக்கெட்களை இவர் எடுத்தார். பின்னர் ஆட வந்த டெக்கானுக்கு போலிங்கர் மூலம் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது சென்னை. 13 ரன்களை மட்டுமே கொடுத்த போலிங்கர் 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி காலி செய்து விட்டார். அதேபோல சதாப் ஜகதியும் தன் பங்குக்கு டெக்கானின் வெந்த புண்ணில் விரலை விட்டு ஆட்டி விட்டார். 2 முக்கிய விக்கெட்களை இவர் வீழ்த்தினார். தொடக்கத்திலிருந்தே சரிவுடன் ஆடி வந்த டெக்கானுக்கு எந்த பார்ட்னர்ஷிப்பும் நிலைக்கவில்லை. சைமண்ட்ஸ் மட்டும்தான் சற்று போராடி 23 பந்துகளில் 22 ரன்களை எடுத்தார்.கில்கிறைஸ்ட் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். கிப்ஸ் 18 ரன்களுடனும், சுமந்த் 16 ரன்களுடனும் வெளியேற்றப்பட்டனர்.போலிங்கரைத் தவிர அஷ்வின், முரளிதரன் ஆகியோரின் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது. அதேபோல ஜகதி அபாரமாக பந்து வீசி 2 விக்கெட்களைச் சாய்த்தார்.ஆட்ட் நாயகனாக போலிங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் அரை இறுதிப் போட்டியிலும் வெளிநாட்டு வீரரான போலார்ட்தான் ஆட்ட நாயகனானார். 2வது அரை இறுதிப் போட்டியிலும் வெளிநாட்டைச் சேர்ந்த போலிங்கர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்தத் தோல்வியைத் தொடர்ந்து நடப்பு சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸும், முதல் அரை இறுதிப் போட்டியில் தோலவியுற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நாளை நடைபெறும் 3வது இடத்துக்கான போட்டியில் மோதவுள்ளன.ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

வால் பையன் கமெண்ட் : ஹய்டேன் தனது மோசமான சாட்களால் தொடர்ந்து அவுட் ஆகி வருகிறார்.





டெல்லி: ஐபிஎல் சந்தித்துள்ள நெருக்கடிக்கு விரைவில் தீர்வு ஏற்படும். கிரிக்கெட் வெற்றி பெறும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் டெண்டுல்கர் கூறியுள்ளார்.ஐபிஎல் நெருக்கடியால் கிரிக்கெட் உலகம் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. தோண்டத் தோண்ட வெளி வரும் ஊழல்களால் அனைவரும் அதிர்ந்து போயுள்ளனர்.இந்த நிலையில் ஐபிஎல் சர்ச்சைகள் குறித்து டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்ற நெருக்கடிகளை சமாளித்து கரை சேரும் வகையில் கிரிக்கெட் விளையாட்டு உறுதியானது.பல கோடி பேர் விளையாட்டை ரசிக்கின்றனர். எனவே இதுபோன்ற பிரச்சினைகளெல்லாம் மிகச் சிறியவையே. விரைவில் இவை அனைத்தும் சரியாகும், கிரிக்கெட் விளையாட்டுக்கு வெற்றி கிடைக்கும்.வாழ்க்கை என்பது எப்போதும் இனிமையானதாகவே இருக்காது. சில நேரங்களில் கடுமையான சூழல்கள் வரும். அதை தாண்டித்தான் ஆக வேண்டும். எனவே இப்போது ஏற்பட்டுள்ள தடைகளைத் தாண்ட கிரிக்கெட் விளையாட்டு உதவும்.சாதாரண கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிதான் முக்கியம். இதுபோன்ற பிரச்சினைகளால் அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஐபிஎல் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வமாகவே உள்ளனர். ஐபிஎல் போட்டிகளை டிவிகளில் பார்க்கவே ஆர்வம் காட்டுகின்றனர். எந்த விளையாட்டாக இருந்தாலும், அதில் ஏற்படும் போட்டிதான் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. கிரிக்கெட் இதில் விதி விலக்கல்ல.தற்போது எழுந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு ஏற்பட்டு கிரிக்கெட் மீண்டும் புதுப் பொலிவடன் மக்களை மகிழ்விக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.தற்போதைய பிரச்சினையால் வீரர்கள் யாரும் கவனம் சிதற மாட்டார்கள். மைதானத்திற்குள் நுழைந்து விட்டால் எதிரணியினர் மட்டுமே அவர்களது கண்களுக்குத் தெரிவார்கள். மற்ற அனைத்தும் மறந்து போய் விடும்.மைதானத்திற்கு வெளியே ஆயிரம் நடக்கும். ஆனால் மைதானத்திற்குள் நுழைந்து விட்டால் எதிரணியை வீழ்த்த நாம் போட்ட திட்டங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும் என்றார் டெண்டுல்கர்.


டெண்டுல்கர்
இன்று 38வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. டெண்டுல்கர் அளித்த பேட்டி: முதல் இரண்டு வருடங்கள் எங்களது அணியில் அனைத்து வீரர்களும் முழுமையாக இடம்பெறவில்லை. காயம் காரணமாக பலர் பங்கேற்க முடியாத சூழ்நிலை இருந்தது. இந்த வருடம் அனைத்து வீரர்களும் விளையாடியதால் வெற்றி பெற முடிந்தது.
பைனலில் வெற்றி பெற்றால் எனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக இருக்கும். இந்த வெற்றி பயணம் ஒரே நாளில் கிடைத்தது அல்ல. நீண்ட காலமாக தயார்படுத்தியது தான். கேப்டன் பதவியில் நான் சிறப்பாக செயல்படுவதாக கூறுகிறார்கள்.
இதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் கிரிக்கெட்டை ரசித்து விளையாடி வருகிறேன் அவ்வளவுதான். எனது சாதனைகளை யார் வேண்டுமானாலும் முந்தி செல்லலாம். நான் அதை கணக்கிட்டு கொண்டு இருப்பது இல்லை. ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் கை நன்றாக இல்லை. 5 தையல்கள் போடப்பட்டுள்ளன. என்னால் இந்த கையால் கிரிக்கெட் பேட்டை தூக்க முடியுமா என்பது தெரியவில்லை. முதலில் நான் பேட்டை தூக்க வேண்டும். ஆனால் இந்த தையல்களை வைத்து அடுத்த 8 நாட்களுக்கு எதுவும் செய்யக்கூடாது. என்னுடைய உடல்நிலையை பொறுத்து முடிவு

எடுக்கப்படும் என்றார்


அமெரிக்காவிலும்
20&20 போட்டியை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக நியூசிலாந்து, இலங்கை அணிகள் மூன்று 20&20 போட்டிகளில் மோதுகின்றன. இதற்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது. புளோரிடாவில் உள்ள லாடர் கில் என்ற மைதானத்தில் போட்டிகள் நடக்க உள்ளன. மே 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஆட்டம் நடைபெறும். இந்த மைதானத்தில் 20 ஆயிரம் பேர் அமரலாம்.



இஸ்ரோ செயற்கைக்கோள்களால்
மக்களுக்கு ஏராளமான பயன்கள்

பூமி பற்றிய ஆய்வுக்காக தொலையுணர்வு செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்று மத்திய அமைச்சர் பிருத்விராஜ் சவான் தெரிவித்தார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதலிளித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிருத்விராஜ் சவான் கூறிய தாவது:
பூமி பற்றிய ஆராய்ச்சிக்காக தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகின்றன.
புவியிசை வட்டப்பாதையில் சுற்றும் தொலைத் தொடர்பு செயற்கைக்கோள்கள் ஜி.எஸ்.எல்.வி. மூலம் செலுத்தப்படுகின்றன. பி.எஸ்.எல்.வி. சி&15 ராக்கெட் மூலம் கார்ட்டோ சாட் 2&பி செயற்கைக்கோள் மே மாதம் 2வது வாரத்தில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிகள் தங்களது செயற்கைக்கோள்களை நமது ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. தொலை தொடர்புத் துறை, தொலைதூரக் கல்வி முறை, டெலிமெடிசின் போன்ற வசதிகள் கிராமப்புறங்களிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இடங்களிலும் கிடைப்பதில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பும் செயற்கைக்கோள்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. செயற்கைக்கோள்கள் மூலமாக கிடைத்திருக்கும் வசதிகள்:
1. நாடு முழுவதும் எல்லா மக்களுக்கும் டி.டி.எச். சேவை
2. தகவல் பரிமாற்றம், வீடியோ இணைப்பு, கிராம தொலைபேசி வசதிகள், அகண்ட அலைவரிசை, ஏ.டி.எம். சேவை, செல்போன் சேவை உள்ளிட்ட வசதிகள் 1.18 ‘விசாட்’கள் மூலம் வழங்கப்படுகின்றன.
3. ஆரம்பக் கல்வியில் தொடங்கி ஆராய்ச்சிப் படிப்புகள் வரையில் 55,230 வகுப்பறைகள் செயற்கைக்கோள் இணைப்பு வசதி பெற்றுள்ளன.
4. நவீன வசதிகள் கொண்ட 59 மருத்துவமனைகளுடன் 307 கிராமப்புற மருத்துவமனைகள் மற்றும் 16 நடமாடும் மருத்துவமனைகள் செயற்கைக்கோள் மூலம் இணைக்கப்பட்டு டெலி மெடிசின் வசதி பெற்றுள்ளன.
5. செயற்கைக்கோள்கள் மூலமாக நாம் அடைந்திருக்கும் பயன்கள் குறித்து அய்வு நடத்தி, அதன் அடிப்படையில் படிப்படியாக மேலும் பல செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வாஷிங்டன்: சூரியனில் நடக்கும் மாற்றங்களை இதுவரை அறியாத புதிய கோணத்தில் படம் பிடித்து வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம். பார்க்கவே படு பிரமிப்பாக இருக்கும் இநதப் படங்களை நாசாவின், சூரிய இயக்க கண்காணிப்பு செயற்கைக்கோள் எடுத்து அனுப்பியுள்ளது.சூரியனில் ஏற்படும் மின் காந்தப் புயல்கள், பீறிடும் பிளாஸ்மா ஆகியவற்றை நெருக்கமாகப் படம் பிடிக்க இந்த பிரத்யேக செயற்கைக் கோளை ஏவியது நாசா.இந்த செயற்கைக்கோள் எடுத்து அனுப்பியுள்ள அட்டகாசமான படங்களை விளக்கங்களுடன் வெளியிட்டுள்ளது நாஸா.கடந்த பிப்ரவரி 11ம் தேதி இந்த செயற்கைக் கோளை நாசா அனுப்பியது. இதுகுறித்து திட்ட தலைமை விஞ்ஞானி டீன் பெஸ்னல் கூறுகையில், சூரியன் குறித்த பல கருத்துக்களை இந்தப் புதிய படங்கள் பொய்யாக்கியுள்ளது என்றார்.நாசா ஹீலியோபிசிக்ஸ் பிரிவு இயக்குநர் ரிச்சர்ட் பிஷர் கூறுகையில், செயற்கைக் கோள் எந்தவித கோளாறும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. கொலராடோ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட சாதனம் உள்ளிட்ட பல முக்கிய கருவிகள் இந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் அதில் மூன்று கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார்.


ஐபில் அணி தொடர்பாக தினந்தோறும் புதுப்புது மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து தகவல் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் கமிட்டி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பா.ஜனதா தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இப்பிரச்னையை எழுப்பிய எதிர்கட்சி உறுப்பினர்கள், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு ஐபிஎல் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஐபிஎல் அணி ஏல விவகாரத்தில் நிகழ்ந்த நிதி முறைகேடுகள் மற்றும் சூதாட்டங்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் கமிட்டி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், இது விடயத்தில் ஐமுகூ அரசு ஆளும் கூட்டணியை பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை காட்டுவதாகவும், ஐபிஎல் சர்ச்சையில் தொடர்புடைய அமைச்சர்களுக்கு ( பிரஃபுல் படேல், ஷரத் பவார்) எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாற்றினார்கள்.தொடர்ந்து பேசிய பல்வேறு எதிர்கட்சி உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்திய நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஐபிஎல் சர்ச்சை குறித்து நாடாளுமன்ற கூட்டுக் கமிட்டி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும் என்றார்.


இன்று நடைபெறும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் - டெக்கான் சார்ஜெர்ஸ் பலபருச்சை
டோனி சாதிப்பரா ?
hayden கை கொடுப்பாரா?


இந்தியன் பர்மியர் லீக் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி
பொல்லார்டின் அபார பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சுருண்டது பெங்களூர் அணி
முதலில் விளையாடிய மும்பை அணி 184
ரன்கள் குவித்தது ,பின்பு ஆடிய பெங்களூர் அணியால்149
ரன்கள் மட்டுமே முடிந்தது


இன்று பங்கு சந்தையில் காலை மார்க்கெட் தொடங்கியதும் ஏறு முகமா தொடங்கியது . ஆனால் நேரம் செல்ல செல்ல மார்க்கெட் சரியதொடங்கியது .
இறுதியில் சம நிலையில் முடிந்தது.
சென்செக்ஸ் - 12புள்ளியும் நிப்டி -15புள்ளியும் உயர்வடைந்தது


மேற்கு இந்தியத் தீவுகளில் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.அதில் ஷேவாக்கும் இடம் பெற்றிருந்தார். துணைக் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஷேவாக் திடீரென காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன மாதிரியான காயம் அது என்பது தெரிவிக்கப்படவில்லை.இதையடுத்து ஷேவாக் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் தமிழக வீரர் முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து முரளி விஜய் மகிழ்ச்சியும், சிறப்பாக ஆட முடியும் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.


இந்தியன் premier லீ க் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது

இன்று நடைபெறும் முதல் அரைஇறுதி போட்டியில் மும்பை - பெங்களூர் பலபருட்சை .

சச்சினின் எழுச்சியால் வாகை சூடுமா?மும்பை


இ‌மா‌ச்சல பிரதேச‌‌ம் ஆ‌ர்‌க்‌கி எ‌ன்ற ‌இட‌த்‌தி‌ல் பது‌ங்‌‌கி இரு‌ந்த நி‌த்யான‌ந்தரை பெ‌ங்களூரு காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌‌ய்து‌ள்ளன‌ர்.பிடதியில் நித்யானந்த‌ தியான பீடம் என்ற பெயரில் ஆஸ்ரமம் நடத்தி வரும் நித்யானந்த‌ர் நடிகையுடன் தனது ஆஸ்ரம அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ‌வீடியோ காட்சிகள் கடந்த மார்ச் 3ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது.இதை அடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் த‌மிழக‌ம், க‌ர்நாடகா‌வி‌ல் வழக்குப் பதிவு செய்ய‌‌ப்ப‌ட்டது. இதை‌த் தொட‌ர்‌ந்து ‌நி‌த்யான‌ந்த‌ர் தலைமறைவானா‌ர். அவரை ‌பிடி‌க்க க‌ர்நாடக காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர முய‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டு வ‌ந்தன‌ர்.இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இ‌மா‌ச்சல பிரதேச‌ மா‌நில‌ம் ஆ‌ர்‌க்‌கி எ‌ன்ற இட‌த்‌தி‌ல் பது‌ங்‌கி இரு‌ந்த ‌நி‌த்யான‌ந்தரை பெ‌ங்களூரு காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று ‌பி‌ற்பக‌லி‌ல் கைது செ‌‌ய்து‌ள்ளன‌ர்.
வால் பையன் கமென்ட் : அப்பாடா ஒரு வழியாக பிடித்து விட்டார்கள்


ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் மூட்டம் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவையை, ஏர் இந்தியா நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. பிரிட்டன், ஃபிராங்பர்ட் மற்றும் டொரண்டோ ஆகிய நகரங்களுக்கான தனது வழக்கமான சேவைகளை நாளை முதல் ஏர் இந்தியா தொடங்க உள்ளது. சாம்பல் மூட்டம் காரணமாக ஐரோப்பிய வான் பாதைகள் மூடப்பட்டதால், கடந்த 6 தினங்களாக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்த பாதை வழியாக இயக்கப்படும் பல ஆயிரக்கணக்கான விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் ஐரோப்பிய வான் பாதையில் நேற்று சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, லண்டன் விமான நிலையம் இன்று திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்தே ஐரோப்பிய நாடுகளுக்கான தனது விமான சேவையை தொடங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இதனை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர், நாடு திரும்ப முடியாமல் ஏற்கனவே காத்துக்கொண்டிருக்கும் பயணிகளின் வசதிக்காக கூடுதல் விமானங்களை இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதற்காக கூடுதல் விமானிகளும், சிப்பந்திகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இதனிடையே இன்று மாலையே முதல்கட்டமாக டெல்லி - பாரீஸ் விமான சேவையை ஏர் இந்தியா இயக்க உள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது


ஆஸ்லோ: ஐஸ்லாந்து எரிமலையால் ஐரோப்பாவில் பயணிகள் பாடு பெரும்பாடாகியுள்ளது.பிஸினஸ் பெரும்புள்ளிகள், திரையுலக நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர். அப்படி சிக்கிக் கொண்டவர்களில் ஒருவர் பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் ஜான் க்ளீஸ். மோண்டி பைதான், ஃபால்டி டவர்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.ஆஸ்லோவில் நடக்கும் ஸ்கான்டிநேவியன் டாக் ஷோவுக்கு வந்திருந்தார் க்ளீஸ். ஐஸ்லாந்து எரிமலை பிரச்சினையில், ஆஸ்லோ விமான நிலையம் மூடப்பட்டதால், ஷோ முடிந்து நார்வேயிலிருந்து வெளியே செல்ல வேறு வழியே இல்லாத நிலை. எனவே டாக்ஸியில் பயணம் செய்துள்ளார் க்ளீஸ். "ஆஸ்லோவிலிருந்து ஸ்டாக்ஹோமுக்கு நிறைய டாக்ஸிகள் செல்கின்றன. பாரிஸ் வரை கூட போகிறார்கள். இதுதான் நீண்ட தூர டாக்ஸி பிரயாணம்.நான் ஆஸ்லோவிலிருந்து பிரஸ்ஸல்ஸ் வரை ரயிலில் போக முயன்றேன். டிக்கெட் கிடைக்காததால் டாக்ஸியில் பயணித்தேன். 3300 பவுண்ட்டுகள் (ரூ. 226,095) செலவானது" என்கிறார் க்ளீஸ். பிரஸ்ஸல்ஸிலிருந்து ஈரோ ஸ்டார் ரயில் மூலம் லண்டன் போய்ச் சேர்ந்தாராம் க்ளீஸ். படகில் பயணித்த பாடகி...இதற்கிடையே ஹாலிவுட்டின் பிரபல பாடகி விட்னி ஹூஸ்டன், டப்ளினில் தான் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிக்கு படகில் பயணம் செய்துள்ளார். அனைத்து விமானங்களில் ரத்து செய்யப்பட்ட நிலையில், பர்மிங்காமிலிருந்து அயர்லாந்தின் டப்ளினுக்கு மூன்றேகால் மணி நேரம் படகில் பயணித்து சென்றுள்ளார். அவரசு இசை நிகழ்ச்சியும் சிறப்பாக அமைந்ததாம்.


ஹைதராபாத்: டென்னிஸ் வீராங்கனை சானியாவும் கணவர் சோயிப் மாலிக்கும் தேனிலவுக்கு மாலத் தீவு செல்கின்றனர்.டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குக்கும் கடும் சர்ச்சைகளுக்கு இடையே கடந்த 12ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது.இந் நிலையில் சானியா அளித்துள்ள பேட்டியில்,திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக உள்ளது. புதிய வாழ்க்கையை அணு அணுவாக ரசிக்கிறேன். திருமணத்துக்கு முன்பு நடந்த பிரச்சனைகளால் மிகவும் வேதனை அடைந்தேன். தூக்கமில்லாமல் பல இரவுகளை கழித்தேன். இப்போது இரு குடும்பத்தினரும் மகிழ்சசியாக இருக்கிறோம்.விரைவில் கணவருடன் பாகிஸ்தான் செல்வேன். பாகிஸ்தானில் குடும்ப விழாக்கள் அனைத்தும் முடிந்த பிறகு தேனிலவுக்காக மாலத்தீவு செல்வோம். சோயிப் மாலிக் கணவராக வந்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய விலைமதிக்க முடியாத பரிசு.எனக்கு மருமகள் என்ற கதாபாத்திரத்துக்கு அர்த்தம் தெரியாது. ஏற்கனவே எப்படி இருந்தேனோ அது போல்தான் இனிமேலும் இருப்பேன். திருமணத்துக்கு பிறகு பெரிய மாற்றம் எதுவும் வரும் என்று சொல்ல மாட்டேன். எப்போதும் போல இருப்பேன். எங்கள் 2 குடும்பத்தினரின் சந்தோஷம் எனக்கு முக்கியம்.எனது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் சரியான பிறகு தொடர்ந்து விளையாடுவேன். ஆசிய போட்டி, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்றார்.சோயிப் மாலிக் கூறுகையில், ஹைதராபாத் மக்கள் காட்டிய அன்பை மறக்க மாட்டேன்.என் மீது விதித்துள்ள தடையை நீக்க கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு அப்பீல் செய்துள்ளேன். கிரிக்கெட் போர்டின் முடிவு எதுவாக இருந்தாலும் அதற்கு தலைவணங்குவேன். ஆனால் விரைவில் பயிற்சிகளில் ஈடுபட உள்ளேன் என்றார்.பாஸ்போர்ட்டை திரும்ப பெற்ற சோயிப்:இந் நிலையில் தன்னைத் திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதாக ஹைதராபாத்தை சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண் கொடுத்த புகாரை தொடர்ந்து கைப்பற்றப்பபட்ட சோயிப் மாலிக்கின் பாஸ்போர்ட் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.பின்னர் இருவருக்கு இடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆயிஷா புகாரை வாபஸ் பெற்றார்.இதைத் தொடர்ந்து தன்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க கோரி சோயிப் மாலிக் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திர நீதிமன்பம் அவரது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டது.இதையெடுத்து சோயிப் மாலிக்கிடம் இன்று பாஸ்போர்ட் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

வால் பையன் கமெண்ட் : எல்லாம் சரி தான் இனி சானியா இந்தியாவில் வ சிப்பாரா? அல்லது பாகிஸ்தானிலா? , இந்தியாவுக்ககாக டென்னிஸ் ஆடுவாரா? அல்லது பாகிஸ்தானுக்கா?

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget