டெண்டுல்கர்
இன்று 38வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. டெண்டுல்கர் அளித்த பேட்டி: முதல் இரண்டு வருடங்கள் எங்களது அணியில் அனைத்து வீரர்களும் முழுமையாக இடம்பெறவில்லை. காயம் காரணமாக பலர் பங்கேற்க முடியாத சூழ்நிலை இருந்தது. இந்த வருடம் அனைத்து வீரர்களும் விளையாடியதால் வெற்றி பெற முடிந்தது.
பைனலில் வெற்றி பெற்றால் எனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக இருக்கும். இந்த வெற்றி பயணம் ஒரே நாளில் கிடைத்தது அல்ல. நீண்ட காலமாக தயார்படுத்தியது தான். கேப்டன் பதவியில் நான் சிறப்பாக செயல்படுவதாக கூறுகிறார்கள்.
இதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் கிரிக்கெட்டை ரசித்து விளையாடி வருகிறேன் அவ்வளவுதான். எனது சாதனைகளை யார் வேண்டுமானாலும் முந்தி செல்லலாம். நான் அதை கணக்கிட்டு கொண்டு இருப்பது இல்லை. ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் கை நன்றாக இல்லை. 5 தையல்கள் போடப்பட்டுள்ளன. என்னால் இந்த கையால் கிரிக்கெட் பேட்டை தூக்க முடியுமா என்பது தெரியவில்லை. முதலில் நான் பேட்டை தூக்க வேண்டும். ஆனால் இந்த தையல்களை வைத்து அடுத்த 8 நாட்களுக்கு எதுவும் செய்யக்கூடாது. என்னுடைய உடல்நிலையை பொறுத்து முடிவு
எடுக்கப்படும் என்றார்
Powered by Blogger.