தனஸ்தானம்

ஜென்ம லக்னத்திற்கு 2 ஆம் வீடான தனஸ்தனாமானது ஒருவருடைய பண நடமாட்டத்தை பற்றி கூறுவது ,தனஸ்தனாமான 2 ஆம் அதிபதி ஆட்சி உச்சம்                                                  

பெற்றாலும் கேந்திர திரிகோண ஸ்தானத்தில் அமைய பெற்று,சுபர்சேர்க்கை பெற்றாலும் நல்ல பண நடமாட்டம் உண்டாகிறது.இத்துடன் தான காரகன் என வர்ணிக்கப்படும் குரு பகவான் வலுவிழக்காமல் இருப்பதும் மிகவும் உத்தமம்.
பொதுவாக தனஸ்தானத்தில் பாவிகள் அமைய பெறாமல் இருப்பது உத்தமம் .
2 ஆம் அதிபதியும் குருவும் நல்ல நிலையில் அமைய பெற்றால் நல்ல பண நடமாட்டம் உண்டாகும்.2 ஆம் அதிபதியும் ,குருவும் வலுவிழக்காமல் இருப்பதும் 6 ,8 ,12 ஆம் வீட்டின் அதிபதிகள் மற்றும் பாதகாதிபதியின்சாரம்,சேர்க்கைஏற்படாமல்இருப்பதும்செல்வம்,
செல்வாக்கை உண்டாக்கும்.
பாதகாதிபதி மற்றும் 6 ,8 ,12 ஆம் வீட்டின் தொடர்பு வலுவாக இருந்தால் செல்வம் ,செல்வாக்கை இழக்கும் அமைப்பும்,எவ்வளவு பணம் வந்தாலும்
அதனை எதிர்பாரதவிதமாக இழக்கும் அமைப்பும் உண்டாகிறது.
ஆக 2 ஆம் அதிபதியும் ,குரு பகவானும் பலம் பெறுவது மிகவும் நல்லது.

சந்திர அதி யோகம்

சந்திரனுக்கு 6 ,7 ,8 ல் சுப கிரகங்கள் இருந்தால் சந்திர அதி யோகம்(சுபம்:புதன்,குரு,சுக்கிரன்).

சந்திர அதி யோகத்தில் பிறந்தவர்கள் அரசனுக்கு நிகரான வாழ்வு அமையும்.தீர்காயுள்,பகைவர்களை வெற்றி கொள்வர்.ஆரோக்கிய மணவாழ்வும்,வாழ்வில் சுபமுடன் வாழ்வார்கள்.
நான் சில ஜாதகங்களில் சந்திர அதியோகம் அமைந்து இருந்தும்
யோக பலனை அனுபவிக்க முடியாமல் உள்ள ஜாதகங்களை பார்த்தேன்
ஏன் இவர்களுக்கு யோகம் அமையவில்லை என்று எண்ணினேன்.
புலிப்பாணி முனிவரின் பாடல்களை பார்த்தபோது விடை கிடைத்தது.
ஆரப்பாயின் மொன்று அரிய கேளு
அப்பனே அம்புலிக்கு ஆறேலேட்டில்
சிறப்பாக மேதினில் நலமாய் வாழ்வான்
பூரப்பா பேய் பூதமா வசியமாகும்
பூதலத்தில் அரசனிடம் சேனை காப்பான்
கூறப்பாகுடி நாதன் கேட்டானால்
குமரனுக்கு யோகங்கள் குலைந்து போச்சே!
லக்னாதிபதி பலம் இழந்து விட்டால் யோகத்தை அனுபவிக்க முடியாது .இது நடை முறையில் சரியாகத்தான் உள்ளது.



  கோபமும் குணமும்

அடிக்கிற கை தான் அணைக்கும்,அணைக்கிற கை தான் என்றாலும் அடித்தால் வலிக்காதோ? என்ன் செய்வது சிலர் அடித்து விடுகிறார்கள்.
அவர்களே கூட சற்று நேரத்திற்கு பின் அடித்ததை நினைத்து வருந்தி அடிபட்டவரை அணைத்து ஆறுதலும் சொல்கிறார்கள்.
            அவர்களுக்கான ஜாதக அமைப்புகள்
3,6,11 ஆமிடங்களில் சுபாவ பாவிகளான சூரியன்,சனி போன்றோர் இருந்தால் ஜாதகருக்கு யோக பலன் நடக்கும் என்பது பொதுவான விதி.ஆனால்அனுபவத்தில் பார்த்தால் 3ஆமிடத்தில் பாவிகள் வீற்றிருக்கும் ஜாதகரை பார்த்தால் கோபம்
மிக்கவ்ராகவும் குணக்கேடராகவும் இருப்பதை அறிய முடிகிறது.இவர்கள் தங்கள் கோபத்தால் தன்னை மட்டுமல்ல
சுற்றி உள்ளவர்களையும் அழிக்கும் குணம் கொண்டவர்கள்.
      ஆனால் இந்த அமைப்பிற்கு சுபர்கள்,யோகாதிபதிகள் பார்வை இருப்பின் அந்த குணங்கள் மாறி அவரே குணவானாகவும் இருப்பதை பார்க்க முடிகிறது.

குரு சந்திரயோகம் - ஒரு பார்வை

குருவை சந்திரன் பார்க்கும் அமைப்பு,சந்திரனை குரு பார்க்கும் அமைப்பு குருசந்திரயோகமாகும்.இதனபலன்ஜாதகருக்குபெயரையும்,
புகழையும்,செல்வம்,செல்வாக்கினையும் தரக்கூடிய நல்ல யோகமாகும்.ஆனால் இந்த யோகமானது கள்த்திர ஸ்தானமான 7 ஆம் வீட்டில் ஏற்பட்டால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினையை ஏற்ப்படுத்தி விடுகிறது .ஆனால் ஏழாமிட குரு-சந்திரனுக்கு சுபர்கள்-யோகாதிபதிகள் பார்வை ஏற்ப்பட்டால் மோசமான பலன்கள் குறைந்து யோகபலன்கள் நடக்கும்.
   குருசந்திர யோக அமைப்பு உடையவர்கள் அரசனுக்கு நிகரான யோகமுடையவர்களாக,இலக்கியசெல்வர்களாக,கலைத்துறையில்,
ஆன்மிகத்துறையில் சாதனை படைப்பவர்களாக இருக்கின்றனர்.
   கடகம் லக்னமாகி குருவும்,சந்திரனும் அங்கு இனைந்திருக்க பிறந்த ஜாதகர் அரசனுக்கு நிகரான யோகமுடையவராகவும் ,ப்லருக்கு உதவக்கூடிய பண்பு நலன்களை பெற்றவர்.மற்றும் மனித உயர்பண்புகளை மீறிய தெய்வீக பண்பு நலன்கள் மிக்கவர்.
    லக்னம் துலாம் தனுசுவில் குரு ஆட்சி,தனுசுவிற்கு ஒன்பதாமிடமான சிம்மத்தில் சந்திரன் இருக்க பெற்ற ஜாதகர்கள் பக்தியின் இலக்கணமாக வாழ்நாள் முழுவதும் இறைவனை சிந்தித்து ,இறைபுகழ் பரப்பும் இறை செல்வர்கள்.
     கடக லக்கனம் விரயத்தில் குரு ப்கை-சுக ஸ்தானமான துலாத்தில் சந்திரன் என்னும் அமைப்புடைய குரு-சந்திர யோகம் பெற்ற ஜாதகர் குரு பகை நிலை பெற்றாலும் ,6 க்குடையோன் 12 ஆம் இடத்தை அடைந்து தன் வீட்டையே பார்க்கும் யோகத்தினை பெற்றதால் சிறந்த இறை நேச செல்வராக திகழ்வார்.
     

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget