மேஷம்:
தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செய ல்படுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.
 
ரிஷபம்:
பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். தாயார் ஆதரித்துப் பேசுவார். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாகமான நாள்.
 
மிதுனம்:
கடந்தஇரண்டு நாட்களாக இழு பறியாக இருந்த வேலைகள் முடியும். கணவன்,மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். நிம்மதியான நாள்.
 
கடகம்:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில்போய் முடியும். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். சிக்கனம் தேவைப்படும் நாள்.
 
சிம்மம்:
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
 
கன்னி:
எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்.
 
துலாம்:
புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து யோசிப்பீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.
 
விருச்சிகம்:
உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
 
தனுசு:
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். வெற்றி பெறும் நாள்.
 
மகரம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
 
கும்பம்:
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். சதயம் நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.
 
மீனம்:
பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். திடீர் பயணங்களும், செலவுகளும் வந்துப் போகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget