மேஷம்: 
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். இனிமையான நாள்.
 
ரிஷபம்:
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். சொந்தபந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். புகழ், கௌரவம் கூடும் நாள்.
 
மிதுனம்:
மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.
 
கடகம்:
சந்திராஷ்டமம் இருப்பதால் அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள். 
 
சிம்மம்:
பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.
 
கன்னி:
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கு சாதகமாக திரும்பும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.
 
துலாம்:
குடும்பத்தில் உங்கள் கை ஒங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.
 
விருச்சிகம்:
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.
 
தனுசு:
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட் களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
 
மகரம்:
கணவன்,மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமை, கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
 
 கும்பம்:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.
 
மீனம்:
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள். முழங்கால் வலி, கண் எரிச்சல் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget