மும்பை: போலிங்கரின் அபாரமான பந்து வீச்சில் சிக்கிச் சிதைந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெற்றி இலக்கை எட்ட முடியாமல் சுருண்டு தோல்வியைச் சந்தித்து ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது.38 ரன்கள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பை இநதியன்ஸை அது சந்திக்கிறது.நவி மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 2வது அரை இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் அதிரடி பந்து வீச்சீல் சிதறிய டெக்கான் சார்ஜர்ஸ் எழுந்திருக்கவே முடியாமல் போய் 19.2 ஓவர்களில் 104 ரன்களை மட்டும் எடுத்துச் சுருண்டு போனது. இதனால் 3வது தொடரிலும் சாம்பியன் பட்டத்தைப் பெறும் அதன் கனவு தகர்ந்து போனது.முன்னதாக முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் டெக்கானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிப் போனது. இருப்பினும் கேப்டன் டோணி மற்றும் பத்ரிநாத்தின் சிறப்பான, பொறுப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 142 என்ற கெளரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது.கேப்டன் டோணி 30 ரன்களும், பத்ரிநாத் போராடி 37 ரன்களையும் எடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய், மாத்யூ ஹெய்டன், சுரேஷ் ரெய்னா ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால் சென்னையின் நிலை கேள்விக்குறியானது.கடைசி ஓவர்கள் அடித்து ஆட வீரர்கள் இல்லாத நிலையில் சென்னை இருந்தது. இருப்பினும் அனிருத்தா ஸ்ரீகாந்த் விளாசிய சில அருமையான ஷாட்களால் ஸ்கோர் 140 ரன்களைத் தாண்ட உதவியது. 15 பந்துகளில் 24 ரன்களை விளாசினார் ஸ்ரீகாந்த்.சென்னை அணியின் முதுகெலும்பை முறித்தவர் ரியான் ஹாரிஸ். 3 விக்கெட்களை இவர் எடுத்தார். பின்னர் ஆட வந்த டெக்கானுக்கு போலிங்கர் மூலம் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது சென்னை. 13 ரன்களை மட்டுமே கொடுத்த போலிங்கர் 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி காலி செய்து விட்டார். அதேபோல சதாப் ஜகதியும் தன் பங்குக்கு டெக்கானின் வெந்த புண்ணில் விரலை விட்டு ஆட்டி விட்டார். 2 முக்கிய விக்கெட்களை இவர் வீழ்த்தினார். தொடக்கத்திலிருந்தே சரிவுடன் ஆடி வந்த டெக்கானுக்கு எந்த பார்ட்னர்ஷிப்பும் நிலைக்கவில்லை. சைமண்ட்ஸ் மட்டும்தான் சற்று போராடி 23 பந்துகளில் 22 ரன்களை எடுத்தார்.கில்கிறைஸ்ட் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். கிப்ஸ் 18 ரன்களுடனும், சுமந்த் 16 ரன்களுடனும் வெளியேற்றப்பட்டனர்.போலிங்கரைத் தவிர அஷ்வின், முரளிதரன் ஆகியோரின் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது. அதேபோல ஜகதி அபாரமாக பந்து வீசி 2 விக்கெட்களைச் சாய்த்தார்.ஆட்ட் நாயகனாக போலிங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் அரை இறுதிப் போட்டியிலும் வெளிநாட்டு வீரரான போலார்ட்தான் ஆட்ட நாயகனானார். 2வது அரை இறுதிப் போட்டியிலும் வெளிநாட்டைச் சேர்ந்த போலிங்கர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்தத் தோல்வியைத் தொடர்ந்து நடப்பு சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸும், முதல் அரை இறுதிப் போட்டியில் தோலவியுற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நாளை நடைபெறும் 3வது இடத்துக்கான போட்டியில் மோதவுள்ளன.ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

வால் பையன் கமெண்ட் : ஹய்டேன் தனது மோசமான சாட்களால் தொடர்ந்து அவுட் ஆகி வருகிறார்.




0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget