இஸ்ரோ செயற்கைக்கோள்களால்
மக்களுக்கு ஏராளமான பயன்கள்

பூமி பற்றிய ஆய்வுக்காக தொலையுணர்வு செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்று மத்திய அமைச்சர் பிருத்விராஜ் சவான் தெரிவித்தார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதலிளித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிருத்விராஜ் சவான் கூறிய தாவது:
பூமி பற்றிய ஆராய்ச்சிக்காக தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகின்றன.
புவியிசை வட்டப்பாதையில் சுற்றும் தொலைத் தொடர்பு செயற்கைக்கோள்கள் ஜி.எஸ்.எல்.வி. மூலம் செலுத்தப்படுகின்றன. பி.எஸ்.எல்.வி. சி&15 ராக்கெட் மூலம் கார்ட்டோ சாட் 2&பி செயற்கைக்கோள் மே மாதம் 2வது வாரத்தில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிகள் தங்களது செயற்கைக்கோள்களை நமது ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. தொலை தொடர்புத் துறை, தொலைதூரக் கல்வி முறை, டெலிமெடிசின் போன்ற வசதிகள் கிராமப்புறங்களிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இடங்களிலும் கிடைப்பதில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பும் செயற்கைக்கோள்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. செயற்கைக்கோள்கள் மூலமாக கிடைத்திருக்கும் வசதிகள்:
1. நாடு முழுவதும் எல்லா மக்களுக்கும் டி.டி.எச். சேவை
2. தகவல் பரிமாற்றம், வீடியோ இணைப்பு, கிராம தொலைபேசி வசதிகள், அகண்ட அலைவரிசை, ஏ.டி.எம். சேவை, செல்போன் சேவை உள்ளிட்ட வசதிகள் 1.18 ‘விசாட்’கள் மூலம் வழங்கப்படுகின்றன.
3. ஆரம்பக் கல்வியில் தொடங்கி ஆராய்ச்சிப் படிப்புகள் வரையில் 55,230 வகுப்பறைகள் செயற்கைக்கோள் இணைப்பு வசதி பெற்றுள்ளன.
4. நவீன வசதிகள் கொண்ட 59 மருத்துவமனைகளுடன் 307 கிராமப்புற மருத்துவமனைகள் மற்றும் 16 நடமாடும் மருத்துவமனைகள் செயற்கைக்கோள் மூலம் இணைக்கப்பட்டு டெலி மெடிசின் வசதி பெற்றுள்ளன.
5. செயற்கைக்கோள்கள் மூலமாக நாம் அடைந்திருக்கும் பயன்கள் குறித்து அய்வு நடத்தி, அதன் அடிப்படையில் படிப்படியாக மேலும் பல செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget