ஐபிஎல் 20&20 போட்டியில் மும்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் & ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறும் அணி சாம்பியன்லீக் கோப்பை 20&20 போட்டியில் விளையாட நேரடியாக தகுதிபெறும் என்பதால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
கடந்த வருடம் முதல் 2 இடங்களை பிடித்தவகையில் ஐதராபாத், பெங்களூர் அணிகள் சாம்பியன் லீக் போட்டியில் மோதின. ஆனால் இந்த வருடம் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து விட்டதால் 3வது இடத்திற்கான மோதலில் இரு அணிகளும் இன்று களமிறங்குகின்றன. இதில் வெற்றி பெறும் அணி மட்டுமே சாம்பியன்லீக் போட்டியில் மோத தகுதிபெறும்.இந்த சூழ்நிலையில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே லீக் போட்டியில் மோதியதில் 2 போட்டிகளிலும் ஐதராபாத் வென்றுள்ளது. எனவே அந்த ஆதிக்கத்தை இந்த ஆட்டத்திலும் செலுத்த விரும்பும். அதற்கு சைமண்ட்ஸ், கிப்ஸ், சுமன், ஓஜா, மார்ஷ் ஆகியோர் உதவுவர். பெங்களூர் அணியிலும் உத்தப்பா, காலிஸ், பிரவீன்குமார், விராட்ஹோக்லி, பீட்டர்சன், ஸ்டெய்ன், டெய்லர், வினய்குமார் ஆகியோர் உள்ளனர். எனவே இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக அமையும்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget