இந்த தொடர் முழுவதுமே சிறப்பான வெற்றிகளை குவித்துவந்த மும்பை அணியும், கடைசி கட்டத்தில் அதிரடியை கையாண்டு அரையிறுதியில் நுழைந்த சென்னை அணியும் மோதின. டாசில் வெற்றி பெற்று முதலில் பேட் செய்த சென்னை அணி ரெய்னா 57 (அவுட் இல்லை; 35 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ரன் விளாசியதால் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது.

அதன்பிறகு விளையாடிய மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன் மட்டுமே எடுத்ததால் 22 ரன் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டெண்டுல்கர் 48, நாயர் 27, ராயுடு 21, பொல்லார்டு 27 (10 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ரன் எடுத்தனர். இந்த தொடர் முழுவதும் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டம் பெறும் என்று நினைத்த மும்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதேசமயம் அரையிறுதியில் நுழையக்கூட ரன்ரேட்டை நம்பி கடைசியில் ஜெயித்த சென்னை அணி இறுதிகட்ட ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
சாம்பியனாக விளையாடிய அணியை பதுங்கி அடித்தது

மும்பை தோல்விக்கு காரணம் என்ன?

11.2 ஓவர் வரை சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 67 ரன் தான் எடுத்திருந்தது. அதன்பின் டோனி இறங்கிய பிறகுதான் ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது. டோனியும், ரெய்னாவும் அதிரடியாக விளாசி ரன்குவித்தனர். 17.1 ஓவரில் 139 ரன்னாக இருந்த போது டோனி அவுட்டானார். 35 பந்தில் இருவரும் சேர்ந்து 62 ரன் குவித்தனர். இந்த கட்டத்தில் ரெய்னா கொடுத்த 2 கேட்ச்களை பெர்னாண்டோவும், ஜாகீர்கானும் தவறவிட்டனர். அதேபோல் கடைசி 8 ஓவரில் சென்னை 100 ரன் குவித்தது. பேட்டிங்கில் பொல்லார்டுவை தாமதமாக களமிறக்கினர். இதனால் சாம்பியனாக விளையாடிவந்த மும்பை கடைசியில் சரிந்தது.
அவர் இறங்குவதற்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது. இருப்பினும் தேவைப்படும் ரன்ரேட்டுக்கு ஏற்றார்போல் விளையாட முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை.
ஐபிஎல் 3 சீசன் போட்டிகள்  முடிவுக்கு வந்தன. மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுவிழா நடந்தது. 40 நிமிடம் நடந்த இந்த விழாவில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசை திருவிழா நடத்தினார். 55 ஆயிரம் பேர் நேரில் ரசித்த இந்த நிகழ்ச்சி முழுவதும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான்.ரகுமான் ‘சாலே சாலோ’ (லகான்), வந்தேமாதரம், ஜெய்ஹோ (ஸ்லம்டக் மில்லியனர்) பாடல்களை பாடி அசத்தினார். ரேஸ் படத்தில் உள்ள டைட்டில் பாடலுக்கு பிபாஷாபாசு, ஷாகித்கபூர் ஆடினர்.
ஐபிஎல் போட்டி இறுதி ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 57 ரன் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்ற சுரேஷ்ரெய்னா கூறியதாவது: அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த அணியில் இருப்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு எங்களுக்கு நல்லவிதமாக அமைந்திருக்கிறது. 3 ஐபிஎல் போட்டிகளில் 2 போட்டிகளில் இறுதிப்போட்டியில் நுழைந்திருக்கிறோம். இப்போது சாம்பியன் ஆகியிருக்கிறோம். தன்னம்பிக்கையோடு விளையாடுவதற்கு டோனி தான் காரணம். என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்படி கூறி அடிக்கடி என்னை உற்சாகப்படுத்துவார். டெண்டுல்கரும் அடிக்கடி வழிநடத்துவார். இவ்வாறு அவர் கூறினார்

வால் பையன் கமெண்ட் : KEEP IT UP சூப்பர் கிங்க்ஸ்

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget