மேற்கிந்திய தீவுகளில் இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட்டை முன்னிட்டு நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தானையும் ஜிம்பாப்வே அதிர்ச்சித் தோல்விஉறச்செய்தது.
முன்னதாக ஆஸ்ட்ரேலியாவிற்கு ஜிம்பாப்வே அதிர்ச்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செயிண்ட் லூசியாவில் நேற்று நடைபெற்ற இந்த பயிற்சி ஆட்டத்தில் ஜிம்பாப்வேயிடம் பாகிஸ்தான் தர்மசங்கடமான 12 ரன்கள் தோல்வியைத் தழுவியது.
64/5 என்று இருந்த நிலையில் ஜிம்பாப்வேயிற்கு மீண்டும் எல்டன் சிகும்பரா வாழ்வு அளித்தார். அவர் 35 பந்துகளில் 49 ரன்களை விளாச அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்தது.
இலக்கைத் துரத்தியபோது துவக்க வீரர் கம்ரன் அக்மல் 4 சிக்சர்களுடன் 27 பந்துகளில் 37 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ஆனால் பாகிஸ்தான் முன்கள வீரர்கள் சொதப்பியதால் கம்ரன் அவுட்டாகும்போது 10 ஓவர்களில் 67/5 என்று ஆனது பாகிஸ்தான்.
அதன் பிறகு ஃபவாத் ஆலம், மிஸ்பா இணைந்து 7.4 ஓவர்களில் 51 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் பிராஸ்பர் உத்சேயா இருவரையும் 3 பந்துகள் இடைவெளியில் பெவிலியன் அனுப்பிவைத்தார். இதன் மூலம் உத்சேயா 15 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார்.
118/5 என்று இருந்த பாகிஸ்தான் உடனடியாக 124/9 என்று ஆனது கடைசியில் 131 ரன்களுக்கு சுருண்டது.
சிகும்பரா பந்து வீச்சிலும் அசத்தி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Ur blog is very nice Mr.Vaalpaiyyan----------->
sorry all the best for ur blogging
by cinechallengers.blogspot.com. ur new to blogger so if u hav any doubt contact me by jeyamaran333@gmail.com mail...............