வாஷிங்டன்: மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அதிகளவில் புகை பிடிப்பதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.
இதுபற்றி அமெரிக்க தேசிய சுகாதார புள்ளிவிவர மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை:
20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களில் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 43 சதவீதம் அதிகம் புகை பிடிக்கின்றனர். மனஅழுத்தம் பாதிக்காத இதே வயதினரில் 22 சதவீதத்தினரே புகை பிடிப்பது தெரிய வந்தது. எனினும், 40 முதல் 54 வயதுக்கு உட்பட்ட ஆண்களிடம்தான் இந்த நிலை முன்பு இருந்தது. இப்போது இளைஞர்களிடமும் மனஅழுத்தம் ஏற்பட்டு புகைப் பழக்கம் அதிகரித்துள்ளது. 40 முதல் 54 வயது ஆண்களில் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் புகை பிடிக்கின்றனர். அதே வயது கொண்ட, மனஅழுத்தம் இல்லாதோரில் 25 சதவீதத்தினர் மட்டுமே புகைப் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். பெண்களில் 20&39 வயது பிரிவில் மனஅழுத்தம் கொண்டவர்களில் 50 சதவீதத்தினர் சிகரெட் பிடிக்கின்றனர். அதுவே, மனஅழுத்தம் இல்லாதவர்களில் புகை பிடிக்கும் பெண்கள் 21 சதவீதம் மட்டுமே.
மனஅழுத்தம் கொண்ட ஆண்கள் 10ல் 3 பேர் தினமும் ஒரு பாக்கெட்டுக்கு மேல் சிகரெட் பிடிக்கின்றனர். இது மனஅழுத்தம் இல்லாதவர்கள் பிடிக்கும் அளவைவிட இருமடங்கு. மனஅழுத்தம் இல்லாதவர்களைவிட அதனால் பாதிக்கப்பட்ட அதிகம் பேர் சிகரெட் பழக்கத்தை கைவிட முடியாமல் தவிக்கின்றனர்.