ஆசிய கண்டத்தில் பிலிப்பைன்ஸ் அருகே தைவான் நாடு உள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் அங்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது.
இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்து குலுங்கின. வீட்டில் இருந்த பண்ட பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் உருண்டன.
எனவே பொதுமக்கள் பீதி அடைந்தனர். அதிர்ச்சியில் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.
இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகி யுள்ளது. இது தைவான் மற்றும் பிலிப் பைன்ஸ் நாட்டின் பாடன் தீவுகளின் வட பகுதியை மையமாக கொண்டு பூமியின் அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் சர்வேதுறை அறிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இருந்தாலும் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
நில நடுக்கத்தினால் தைவானில் சில வீடுகள் மற்றும் கட்டிடங்களில் கீறல் ஏற்பட்டிருந்தது. ஆனால் உயிர் சேதம் மற்றும் பொருட்சேத விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.