எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து உள்ளது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. அதில்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பது எலுமிச்சையாகும்.
தற்போது சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் எலுமிச்சைக்கு உண்டு என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுநீரகத்தை நலமுடன் பராமரிப்பதில் எலுமிச்சையின் செயல்கள் பற்றி அமெரிக்காவின் சான்டியகோவில் உள்ள ஒருங்கிணைந்த சிறுநீரக நலமையத்தின் இயக்குநர் ரோஜர் சர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர்.
ஆய்வில், சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுப்பதில் எலுமிச்சை சிறப்பாக செயல்படுகிறது. மற்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களைக் காட்டிலும் எலுமிச்சை நல்ல விதத்தில் செயல்படுவதும் தெரிய வந்துள்ளது.
எனவே, தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பு, கால்சியம், புரோட்டீன் ஆகியவற்றின் பாதிப்பைக் குறைக்க, எலுமிச்சை சாறு மிகவும் உதவும்.