குஜராத்தில் 65 ஆண்டுகளாக உணவு, தண்ணீர் இல்லாமல் வாழும் அதிசய மனிதர்
மருத்துவர் குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் சுதிர் ஷா என்பவர் கூறுகையில், ‘‘பிரகலாத் ஜானியின் சிறுநீரகத்தில் சிறுநீர் உற்பத்தியாகிறது. அதே நேரம், அதை அவர் தனது திறன் மூலம் உடலுக்குள் மறு சுழற்சி செய்கிறார். யோகக் கலை மூலம் இதுபோன்று அவர் செய்து வருவதாகக் கருதுகிறோம். இதுபற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். பிரகலாத் ஜானியை முழுமையாக பரிசோதித்து உண்மைகளை தெரிந்து கொண்ட பின் மக்களுக்கு சொல்வோம்’’ என்றார்.
குஜராத்தில் 65 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் வாழ்ந்து வருகிறார் பிரகலாத் ஜானி என்ற 82 வயது முதியவர். இவரை பரிசோதித்து வரும் டாக்டர்கள் குழுவினர் வியப்படைந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் பிரகலாத் ஜானி. இவர் கடந்த 65 ஆண்டுகளாக உணவு சாப்பிடுவதில்லை என்றும் தண்ணீர் குடிப்பதில்லை என்றும் கூறுகிறார். இதைத் தொடர்ந்து, ராணுவ மருத்துவமனையைச் சேர்ந்த 35 டாக்டர்கள் கொண்ட குழுவினர் பிரகலாத் ஜானியை சோதித்தனர். பிரகலாத் சொல்வது உண்மைதான் என்றும் உணவும் தண்ணீரும் அவர் உட்கொள்வதில்லை என்றும் சோதனையில் டாக்டர்கள் உணர்ந்து கொண்டனர்.
ஆனால், உணவும் தண்ணீரும் இல்லாமல் பிரகலாத் ஜானி எப்படி உயிர் வாழ்கிறார் என்பதை டாக்டர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரைத் தொடர்ந்து கண்காணித்தும் பரிசோதித்தும் வரும் டாக்டர்கள், இது ஒரு மருத்துவ அதிசயம் என்று கூறுகின்றனர்.
உணவு சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் பிரகலாத் ஜானி எப்படி வாழ்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ராணுவ மருத்துவமனை டாக்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஜானி கடைபிடிக்கும் வழிகளைக் கையாண்டு பசியையும் தாகத்தையும் வென்று விட்டால் போர் முனையில் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget