தங்கள் மார்பகம் பெரிதாக இல்லையே என கவலைப்படும் பெண்கள் ஏராளம். இந்நிலையில், சோயா பீன்ஸ் உட்பட எளிய உணவு பழக்கம் மூலம் மார்பகத்தை பெரிதாக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிய மார்பகம் கொண்ட பெண்கள் தன்னம்பிக்கை இழக்கின்றனர். மார்பகத்தைப் பெரிதாக்கும் வழிகளை ஆராய்கின்றனர். இதற்குத் சில அறுவை சிகிச்சை முறைகள் இருந்த போதிலும் அதற்கான செலவு அதிகமாவதால் பலருக்கு எட்டாக் கனியாகி விடுகிறது.
மார்பகம் பெரிதாக இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைவது ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன். குறிப்பாக, பெண்கள் பருவம் அடையும் வயதில் இந்த ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும். இந்த நேரத்தில்தான் மார்பக வளர்ச்சி ஏற்படுகிறது. ஒருவேளை ஹார்மோன் குறைவாக சுரந்தால் மார்பகம் சிறிதாகி விடுகிறது. பெரும்பாலான பெண்கள் குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாகவே பூப்பெய்தி விடுவதாலும் மார்பக வளர்ச்சி தடைபடுகிறது.
எனவே, இளம் வயதில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவை அதிகரிக்கும் உணவை உட்கொள்வதன் மூலம் இயற்கையாக மார்பகத்தை பெரிதாக்கிக் கொள்ள முடியும். அதாவது, ஆளி விதை, சோயா பீன்ஸ் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்த ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இதன்மூலம் இளம் வயதிலேயே தேவையான அளவு மார்பக வளர்ச்சியைப் பெற முடியும்.
மார்பகத்தை பெரிதாக்கிக் கொள்ளும் ஆர்வத்தில் அளவுக்கு அதிகமாக அவற்றை சாப்பிடக் கூடாது. அதனால் மற்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்