ஐசிசி உலக கோப்பை டி20 தொடர், வெஸ்ட் இண்டீசில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் இலங்கை & நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

மூன்றாவது உலக கோப்பை டி20 போட்டி, வெஸ்ட் இண்டீசில் ஏப்.30 முதல் மே 16 வரை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், முன்னாள் சாம்பியன் இந்தியா உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலக கோப்பையில் களமிறங்குகிறது.
தென் ஆப்ரிக்காவில் நடந்த (2007) முதலாவது உலக கோப்பை டி20 தொடரில், டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 2வது உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி கோப்பையை தட்டிச் சென்றது. வெஸ்ட் இண்டீசில் நடக்கும் 3வது தொடரில் கோப்பையை வெல்ல கடும் போட்டி நிலவுகிறது.
டி20 போட்டியில் ஒரு சில ஓவரில் ஆட்டத்தின் முடிவு தலைகீழாக மாறிவிடும் என்பதால், எல்லா அணிகளுக்குமே சம வாய்ப்பு உள்ளது. மொத்தம் உள்ள 12 அணிகளும், தலா 3 அணிகள் கொண்ட 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நடக்கும் லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இதில் தலா 4 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளில் மீண்டும் லீக் ஆட்டங்கள் நடக்கும்.
இ மற்றும் எப் பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டி மே 16ம் தேதி நடக்கவுள்ளது. எல்லா அணிகளிலுமே அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகம் உள்ளதால், இந்த தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரவு 10.30 மணிக்கு நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை & நியூசிலாந்து (பி பிரிவு) அணிகளும், அதிகாலை (மே 1) 2.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் & அயர்லாந்து அணிகளும் மோதுகின்றன.
சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நாளை இரவு 7 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. அடுத்து, பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்க அணியுடன் நாளை மறுநாள் விளையாடுகிறது. ஆப்கானிஸ்தானை மட்டும் வென்றால் கூட, இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவது உறுதி.
இந்த தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் டோனி கூறுகையில், ‘கற்றுக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானை எளிதாக எடை போட மாட்டோம். கவனமாக விளையாடி வெற்றி பெறுவோம். ஐபிஎல் தொடரில் விளையாடியது நல்ல பயிற்சியாக இருந்தது. எல்லா வீரர்களும் நல்ல பார்மில் இருப்பதால், மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றுவோம்’ என்றார்.
நேரடி ஒளிபரப்பு


ஏப். 30 & மே 8: ஸ்டார் கிரிக்கெட்

மே 9 & மே 16: இஎஸ்பிஎன்

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget