INDIA'S FIRST REAL TIME (every 30 minutes) TRADING TIPS VISIT MY BLOG: tradersfirst.blogspot.com
சர்வதேச பங்குச் சந்தைகளின் உயர்வு காரணமாக, நேற்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 365 புள்ளிகள் உயர்ந்து 16,388ல் நிலை பெற்றது.
ஆசிய பங்குச் சந்தைகளின் ஏற்றம் காரணமாக, நேற்று வர்த்தகம் தொடங்கும்போதே சென்செக்ஸ் உயர்வுடன் இருந்தது. பிற்பகலில் ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மேலும் உற்சாகம் அடைந்து பங்குகளை வாங்கிக் குவித்தனர்.
குறிப்பாக நிதி நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கின. இதையடுத்து, வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 365 புள்ளிகள் உயர்ந்து 16,388ல் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 111 புள்ளிகள் உயர்ந்து 4,917 புள்ளிகளில் முடிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை நிர்ணயிக்கும் 30 நிறுவன பங்குகளில் 24 உயர்வுடன் முடிந்தன. அதிகபட்சமாக ஐடி துறை பங்குகள் 3.48 சதவீதம் உயர்ந்தன. ஐடி நிறுவனங்களின் வெளிநாட்டு வருமானத்தின் பெரும்பகுதி அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து வருவதால் வருமானம் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. ஐடி துறை பங்குகளின் உயர்வுக்கு இதுவே முக்கிய காரணம். அடுத்தபடியாக உலோக துறை பங்குகள் 2.98 சதவீதம் உயர்ந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை நிர்ணயிப்பதில் முன்னிலை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.08 சதவீதமும் இரண்டாம் இடத்தில் உள்ள இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் 3.37 சதவீதமும் உயர்ந்தன.இன்றும் பங்கு சந்தைகள் 2 % வரை உயர்வை கண்டன.கடந்த ஒருவாரமாக முதலிட்டார்கள் இடையில் நிலவி வந்த பயம் நீங்கி நம்பிக்கை பிறந்தது.
நல்ல பதிவு... தொடர்ந்து பங்குச் சந்தை பதிவு வரவேண்டும்