இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதையே முழு நேர வேலையாக வைத்திருக்கும பாகிஸ்தான், அதற்கான விலையைக் கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது. பாகிஸ்தானை சேர்ந்தவர்களை அனைத்து நாடுகளும் தீவிரவாதியோ என சந்தேகக்கண் கொண்டு பார்க்கத் தொடங்கிவிட்டன.
அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தை விமானம் மூலம் மோதி தீவிரவாதிகள் தகர்த்த சதிச் செயலுக்குப் பிறகு, கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை அமெரிக்கா பின்பற்றி வருகிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கூடுதலாக பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கிறது. இப்போது டைம்ஸ் ஸ்கொயர் கார் வெடிகுண்டு சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானியர் மீது மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் இருந்து வந்து பல தலைமுறைகளாக அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டவர்கள் மீதும் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. உயர் கல்விக்கும், வேலைக்கும் அமெரிக்கா செல்வதையே விரும்பிய பாகிஸ்தான் மக்களுக்கும் அந்த ஆர்வம் குறைந்துபோய் விட்டது. விசா வழங்குவதற்கு அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை வைத்துள்ளதும், விமான நிலையங்களில் சோதனைகளை கடுமையாக்குவதும் பாகிஸ்தான் இளைஞர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க விசா கிடைத்தவர்களும் கூட, தேவையில்லாமல் ஏதாவது சிக்கலில் மாட்டிவிடுவோமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா செல்வதை தவிர்க்கின்றனர்.
அமெரிக்கா வளமான பூமி. திறமையானவர்கள் உலகில் எந¢த மூலையில் இருந்தாலும் அவர்களை இரு கரம் நீட்டி அழைத்துக் கொள்ளும். வாழ்க்கையில் உயர அனைத்து வாய்ப்புகளையும் அள்ளித் தெளிக்கும். அதுதான் அமெரிக்கா. இந்த வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பு பாகிஸ்தானியர்களுக்கு இனி கிடைப்பது கஷ்டம்.
பாகிஸ்தான் மக்களை இந்த பரிதாபமான நிலைக்கு தள்ளிய பெருமை, அந்நாட்டு ராணுவத் தளபதிகளுக்கும் ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கும்தான் போய்ச் சேரும். அவர்களின் பிள்ளைகள் அனைத்து வசதிகளுடன் அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் படிப்பார்கள். உயர் வேலையில் சேர்வார்கள். அது தனிக் கதை. ஆனால் அப்பாவி மக்கள்...? பல ஆண்டுகளாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் கொடுத்த மிகப்பெரிய விலை அது.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget