எப்படியெல்லாம் எதிரி நாட்டை எரிச்சல்படுத்தலாம் என ரூம் போட்டு யோசிப்பார்கள் போல் இருக்கிறது. இந்தியாவை எரிச்சல் படுத்த பாகிஸ்தான் தீவிரவாதத்தை பயன்படுத்துகிறது என்றால், வட கொரியாவை நோகடிக்க, மெகா சைஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்துகிறது தென் கொரியா.
ஒரே நாடு, ஒரே இனமாக இருந்த கொரியாவை ஜப்பான் ஆண்டு வந்தது. பசிபிக் போருக்குப் பிறகு, 1945ல் அமெரிக்கா ஆதரவுடன் தென் கொரியாவும் சீனா, ரஷ்யா ஆதரவோடு வட கொரியாவும் உருவானது. இந்தப் பக்கம் ஜனநாயகம், அந்தப் பக்கம் கம்யூனிசம் என இரு துருவங்களாகி போனது. தென் கொரியாவின் போர்க் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதலில் கடலில் மூழ்க, அதற்குக் காரணம் வட கொரியாதான் என முஷ்டியை மடக்கியது தெ.கொ. இது அபாண்டம் என வ.கொ. மறுக்கிறது. இந்த நிலையில்தான் வித்தியாசமான பிரசாரத்தை தொடங்கியிருக்கிறது தென் கொரியா.
இரு நாடுகளுக்கும் இடையில் 155 மைல் நீள எல்லைப் பகுதியில் மெகா சைஸ் ஸ்பீக்கர்களை வைத்து இரவும் பகலும் பிரசாரம் செய்து வருகிறது. ஜனநாயகத்தின் சிறப்பு, தென்கொரியர்களின் சந்தோஷமான வாழ்க்கை முறை பற்றி 4 மணி நேரம் கொண்ட நிகழ்ச்சியை தினமும் மூன்று முறை ஒலிபரப்புகிறது. அதோடு, வட கொரியாவைப் போல் பஞ்சம் எதுவும் இல்லை என்றும் எல்லோரும் நிறைய சாப்பிட்டு குண்டாக இருப்பதுதான் பிரச்னையாக இருக்கிறது என்றும குத்திக் காட்டுகிறது. இதைக் கேட்கும்  வட கொரியர்கள் எல்லை தாண்டி வந்தால், வரவேற்று வாழ்வளிக்கிறது. அதோடு எல்லை நெடுகிலும் பெரிய பெரிய டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகளை வைத்துள்ளது. அவற்றில் தென் கொரியாவின் வானுயர்ந்த கட்டிடங்கள், சந்தோஷமான குடும்பங்கள், பெரிய பெரிய தொழிற்சாலைகள் ஒளி வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதுபோக ஹீலியம் பலூன்களில் போட்டோக்கள் நிரம்பிய துண்டுப் பிரசுரங்களை எதிர்ப் பக்கம் கொட்டி வருகிறது. இப்படி பல விதங்களில் வட கொரிய அரசை வெறுப்பேற்றி வருகிறது தென் கொரியா.
எவ்வளவுதான் பொறுக்கும் வட கொரியா. ஸ்பீக்கர் பிரசாரத்தை நிறுத்தாவிட்டால், பீரங்கித் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது. இன்னொரு போருக்கு தயாராகிறது ஒரே இனம்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget