மேஷம்:
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். புது வேலை அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷபம்:
பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.
மிதுனம்:
குடும்பத்தில் உங்கள் கை ஒங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர் கள். அக்கம், பக்க வீட்டாரின் அன்புத் தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கனவு நனவாகும் நாள்.
கடகம்:
நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர் கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
சிம்மம்:
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.
கன்னி:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பணவரவு திருப்தி தரும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
துலாம்:
ராசிக்குள் சந்திரன் செல்வதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.
விருச்சிகம்:
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களும், செலவுகளும் வந்துப் போகும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
தனுசு:
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.
மகரம்:
பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சொந்த,பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
கும்பம்:
கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைகள் உடைபடும் நாள்.
மீனம்:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனஉளைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் மனப் போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.