TRADING LIVE TIPS VISIT MY BLOG : www.tradersfirst.blogspot.com
நடப்பு நிதியாண்டில் வங்கிகளின் வசூலாகாத கடன்கள் (என்பிஏ) ரூ.1 லட்சம் கோடியைத்தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதுகடந்தநிதியாண்டைவிட
இரண்டு மடங்கு அதிகம்.கிரீஸ் நாட்டின் நிதி நெருக்கடி விஸ்வரூபம் எடுத்துள்ளதால் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, டெக்ஸ்டைல்ஸ் துறை வெளிநாட்டு ஆர்டர்களை பெருமளவில் நம்பி உள்ளன. இவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆர்டர்கள் மிகவும் குறைவாக உள்ளன. இதுதவிர, ஸ்டீல், டெக்ஸ்டைல்ஸ், விமான போக்குவரத்து, ரியல் எஸ்டேட், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வருமானமும் நடப்பு நிதியாண்டில் குறையும். இதனால் இத்துறை சார்ந்த நிறுவனங்கள் வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பித் தருவதில் தாமதம் ஏற்பட்டு வசூலாகாத கடன்கள் அதிகரிக்கும் என வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மார்ச் 31 உடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டின் இறுதியில் வங்கிகளின் வசூலாகாத கடன் ரூ.68 ஆயிரம் கோடியாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டில் இரண்டு மடங்காகி ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும்.
கடந்த நிதியாண்டில் வசூலாகாத கடனை வசூலிக்க ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை வங்கிகள் ஏலம் விட்டன. ஆனால், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள் (ஏஆர்சி) ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை மட்டுமே ஏலம் எடுத்தன. நிதி பற்றாக்குறையே இதற்குக் காரணம்.எனவே, சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களில் 49 சதவீதமாக உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்துறை சார்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
avasiyamana thagaval