மேஷம்:

வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக செலவு செய்வீர்கள். சகோதரவகையில் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரி பாராட்டுவார். உற்சாகமான நாள்.

ரிஷபம்:
குடும்பத்தில் நிலவி வந்த ஒருவித மனப்போர் விலகும். தொல்லை தந்த கடனில் ஒருபகுதியை தந்து முடிப்பீர்கள். சகோதரர் பாசமழை பொழிவார். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் தடைபட்ட பணிகள் முழுமையடையும். பரபரப்பான நாள்.

மிதுனம்:
பேச்சால் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்வார்கள். தந்தைவழி உறவினர்கள் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். மன நிம்மதியடையும் நாள்.

கடகம்:
தடுமாறிக் கொண்டிருந்த சில வேலைகள் தானாகவே முடியும். வீட்டில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வரும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோ கத்தில் உங்கள் கை ஓங்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

சிம்மம்:
நெடுநாட்களாக நினைத்திருந்த காரியங்கள் இப்போது கைகூடி வரும். சொத்துப் பிரச்னைகள் தீரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மகிழ்ச்சி தங்கும். சாதிக்கும் நாள்.

கன்னி:
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. செரிமானக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். போராட்டமான நாள்.

துலாம்:
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கணவன்,மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. உத்யோகத்தில் மகிழ்ச்சி தங்கும். எண்ணங்கள் ஈடேறும் நாள்.

விருச்சிகம்:
எதிர்பார்த்த வகையில் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி கிட்டும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு:
நீண்டநாள் கனவு நனவாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத உதவி கிட்டும். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.

மகரம்:
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வேற்றுமதத்தவர் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் மகிழ்ச்சியுண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.

கும்பம்:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் வேண்டாம். திடீர் செலவு வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களைப்பற்றி வதந்திகள் வரும். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.

மீனம்:
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். பரபரப்பான நாள்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget