பங்கு சந்தைகள் பற்றிய தகவல்களுக்கு :www.tradersfirst.blogspot.com
 முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்தொலைத்தொடர்புத் துறையில் கால் பதிக்க திட்டம்:

அம்பானி சகோதரர்களுக்கு இடையே, கடந்த 2006ம் ஆண்டு பாகப் பிரிவினை ஏற்பட்டது. அப்போது ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, ஒருவர் தொழில் செய்யும் துறையில் அடுத்தவர் நுழைவதில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கிடையே, இயற்கை எரிவாயு சப்ளை தொடர்பாக இருவருக்கும் இடையே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
அதில், முகேஷுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. எனினும், குடும்ப ஒப்பந்தம் பற்றி 6 வாரத்துக்குள் பேச்சு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. புதிய ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான துவக்கமாக, ஒருவர் ஈடுபட்டுள்ள துறையில் மற்றொருவர் ஈடுபடுவதைத் தடுக்கும் குடும்ப ஒப்பந்தத்தை ரத்து செய்து கடந்த ஞாயிறன்று இருவரும் அறிவித்தனர்.
இந்நிலையில், போன் நிறுவனமான ஏர்டெல்லின் தலைவர் சுனில் மிட்டலை முகேஷ் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் இறங்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2008ம் ஆண்டில் உரிமம் பெற்ற வீடியோகான் உட்பட சில போன் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது குறித்து முகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பிரிக்கப்படாத ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்த ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனம், பாகப்பிரிவினையின்போது, அனில் அம்பானி வசமானது. அந்நிறுவனம் இப்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 5  வது  எண்ணெய் கிணறு கண்டுபிடிப்பு:
பெட்ரோலிய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், குஜராத் மாநிலத்தில் 5வது எண்ணெய் வயலை கண்டுபிடித்துள்ளது.
அகமதாபாத் நகரிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேம்பே படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இதற்கு சிபி&ஓஎன்என்&2003/1 என பெயரிடப்பட்டுள்ளது. 635 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த படுகை ஏ மற்றும் பி என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இது அந்நிறுவனத்தின் 5வது கண்டுபிடிப்பாகும். 
அரசு துறை நிறுவனங்களின் ரூ.40,000 கோடி பங்கு விற்க அரசு திட்டம:
பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கங்கள் பற்றி கவலைப்படாமல், அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் இந்த நிதி ஆண்டில் ரூ.40,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள், கட்டமைப்பு பணிகளுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. அத்துடன், அரசு நிறுவனங்களில் பொது மக்களின் பங்கை அதிகரிக்க அரசு விரும்புகிறது. எனவேதான், முன்னணி நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் நிதி திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய நிதி நெருக்கடி மற்றும் பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் இருக்கின்றன. அதனால், அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனைத் திட்டம் தள்ளிப் போகுமா என சிலர் சந்தேகம் கொண்டுள்ளனர். ஆனால், அரசைப் பொருத்தவரை தனது பங்கைக் குறைத்துக் கொள்ளும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த நிதி ஆண்டில் (2010 &11) திட்டமிட்டபடி முன்னணி நிறுவனங்களில் அரசின் பங்குகள் குறிப்பிட்ட சதவீதம் விற்பனை செய்யப்படும். ஜூலை முதல் அந்தப் பணிகள் விரைவுபடுத்தப்படும். பங்குச் சந்தை ஏற்ற, இறக்கமாக இருப்பது எப்போதும் நடப்பதுதான். சவால் வரும்போது அதை எதிர்கொள்ள பங்கு விற்பனை அமைச்சகம் தயாராக உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உட்பட எண்ணெய் நிறுவனங்களில் அரசின் பங்குகளைக் குறைப்பது பற்றி பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்த பிறகே, விற்பனை நடவடிக்கை தொடங்கும். எந்தெந்த நிறுவனங்களின் பங்குகளை எத்தனை சதவீதம் விற்பனை செய்வது, எப்போது அதற்கான அறிவிப்பு வெளியிடுவது என அரசு விரைவில் முடிவு செய்து அறிவிக்கும்.
அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரூ.40,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பங்கு விற்பனைத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன.ஆனால் வரும் வாரங்களில்
பங்கு சந்தைகளின் போக்கு எப்படி இருக்கும் என்பதை திங்கள் கிழமை நிபிட்டி தனது
5000 புள்ளிகள் நிலையை எவ்வாறு கையாளுகிறது என்பதை வைத்து தான் சொல்ல
முடியும்.சந்தையை பொறுத்தவரை நிபிட்டி 5100 புள்ளிகள் வரை செல்ல வாய்ப்புள்ளது .
ஆனால் அதன் பிறகு சந்தையில் அதிக அளவு selling பிரஷர் ஏற்பட வாய்ப்புள்ளது .
எனவே முதலீட்டார்கள் மிகவும் கவனமாக செயல்படவும். லாபங்களை உடனுக்குடன்
பதிவு செய்யவும்.நீண்ட கால முதலீட்டிற்கு இது தகுந்த நேரமல்ல. கவனம். 

 

1 comments:

  1. Nice info,

    follow my classified website - indian latest online classiindia classified - www.classiindia.in

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget