கூகுள் நிறுவனத்தின் பேக் மேன் கம்ப்யூட்டர் கேம் விளையாட்டால் உலகம் முழுவதும் அலுவலக ஊழியர்களின் 50 லட்சம் மணி நேரம் வீணாகிப்போனது. பொருளாதாரத்துக்கு ரூ.570 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
பேக் மேன் கம்ப்யூட்டர் கேம் கண்டுபிடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. இதைக் கொண்டாடும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை கூகுள் நிறுவனம், கூகுள் சர்ச் இன்ஜின் அருகே, கூகுள் என்ற ஆங்கில வார்த்தையின் வடிவத்தில் இந்த கம்ப்யூட்டர் கேமையும் போட்டிருந்தது. சர்ச் இன்ஜினில் தேட வந்தவர்கள் அனைவரும் பேக் மேன் கேமை பார்த்ததும் விளையாட ஆரம்பித்துவிட்டனர். 48 மணி நேரம் வரை இந்த கூகுள் லோகோ பேக் மேன் கேம் இருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 50.5 கோடிப் பேர் கூகுள் சர்ச் இன்ஜினை பயன்படுத்தியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானாவர்கள் கூகுள் லோகோ பேக் மேன் கேமை பார்த்ததும் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். இதனால் உலகம் முழுவதும் அலுவலக ஊழியர்களின் 48 லட்சத்து 19 ஆயிரம் மணி நேரம் வீணாகிப் போனது. அலுவலக பணி நேரத்தில் விளையாடியதால் ரூ.570 கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக ரெஸ்க்யூ டைம் என்ற ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இத்தனை கோடி பணத்துக்கு கூகுள் நிறுவனர்களான லாரி, செர்ஜி மற்றும் அங்கு பணிபுரியும் 19,385 ஊழியர்களையும் 6 வாரங்களுக்கு வேலைக்கு அமர்த்தலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேக் மேன் கேமுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும் அசந்து விட்டோம். இதனால் கூகுள் டாட் காமில் இந்த கேமை நிரந்தரமாக விளையாட வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார் கூகுள் நிறுவன துணைத் தலைவர் மரிஸா மேயர்.
Sorry sir, I cannot understand the meaning.
Can you tell us a little in English or Hindi?