இன்றைய இளம் பெண்கள் புரட்சிகரமாக சகல துறைகளிலும் ஆண்களுக்கு சரிநிகர்
சமானமாகவும், சிலவற்றில் ஆண்களையே மிஞ்சிடும் வகையிலும் ஈடுபட்டு பரவலாக வெற்றி பெற்று வருகின்றனர்.உயர் கல்வி கற்பதிலும்,உயர் பதவிகள் வகிப்பதிலும் அவர்களின் ஈடுபாடு மிகையாகவே உள்ளது.
சுயசம்பாத்தியம் காரணமாக பிறரை சார்ந்திருக்க விரும்பாமலும்,பெண்களில் பலர்
இருப்பதை நடைமுறையில் பார்க்கிறோம்.சமுகம்,குடும்பம் இவைகளில் பெண்களுக்கென கடைபிடிக்கப்பட்டு வந்த கட்டுபாடுகளும் பெருமளவில் இப்போது தளர்ந்து போய் விட்டன.அதே சமயம் இன்னொரு புறம்,அநேக பெண்கள் திருமணமாகும் முன் பிற ஆண்களால் ஏமாற்ற்றபட்டு விடக்கூடிய ஆளாகின்ற
அவலங்களையும் நிறையவே,செய்திதாள்கள், தொலைக்காட்சி முலமாக நாம் அறிய முடிகிறது.
                    ஜோதிடரீதியாக இத்தகைய நிலைமைக்கு ஆளாகக்கூடிய பெண்கள் ஜாதகத்தில் கீழ்காணும் கிரக அமைப்புகள் இருப்பதை காண முடிகிறது .
                   1 . ஜாதகத்தில் குரு அமர்ந்த ராசிக்கு 1 ,5 ,7 ,9 ல் சனி,சுக்கிரன் சேர்ந்தோ அல்லது தனித்தனியே இருந்தாலும்,
2 . ஜாதகத்தில் சனி அமர்ந்த ராசிக்கு 1 ,3 ,7 ,10 ல் குரு,சுக்கிரன் சேர்ந்தோ அல்லது
தனித்தனியே இருந்தாலும்
3 . ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசிக்கு 1 ,7 ல் குரு,சனி சேர்ந்தோ அல்லது தனித்தனியே இருந்தாலும்
                இம்மூன்றுவிதமான கிரக அமைப்புகளில் ஏதேனுமொன்று பொருந்தி வந்தால் ஜாதகி,திருமணமாகும் முன் பிற ஆண்களால் ஏமாற்றப்பட்டு விடக்கூடிய
நிலைக்கு ஆளாக நேரிடும்.
     ஆகவே பெண்கள் ஜாதகத்தில் இத்தகைய கிரக அமைப்பு காணபட்டால் பெற்றோர்கள்,பெரியவர்கள் அவர்களை மிகவும் எச்சரிக்கையுடன் கட்டுபடுத்தி வளர்க்க முயற்சிக்க வேண்டியது அவசியமாகும்.அளவிற்கு அதிகமான சுதந்திரம்
கட்டுபாடற்ற தனிமை,பயணங்கள்,பொழுதுபோக்கு இவற்றில் பெண்களை கவனமுடன் கண்காணிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.

பின் குறிப்பு: லக்னாதிபதி வலுவுடன் இருந்தால் பாதிப்பு பெரியதாக இருக்காது.

1 comments:

  1. Unknown says:

    அண்ணே! என் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன்
    அம்மணியின் ஜாதகத்தை அனுப்பவும்.

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget