ஐ.பி.எல். போட்டியின் போது நடந்த இரவு விருந்துகளில் வீரர்கள் கலந்து கொண்டதும், பயண களைப்புமே தோல்விக்கு காரணம் என இந்திய அணியின் கேப்டன் டோனி கூறிய கருத்துக்கு கிரிக்கெட் வாரியமும், முன்னாள் வீரர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

உலக கோப்பை டி20ல் இந்திய அணி அரை இறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியதால், ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சூப்பர் 8 சுற்றில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களிலும் தோற்ற இந்திய அணிக்கு முன் னாள் வீரர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அணியுடனான கடைசி சூப்பர் 8 லீக் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியாவது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி கடைசி பந்தில் சிக்சர் விட்டுக் கொடுத்து மோசமாக தோற்றது.
இந்த தோல்வி குறித்து கேப்டன் டோனி கூறியதாவது:
ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதால்தான் இந்திய அணி தோற்றது என்பதை ஏற்க முடியாது. ஐபிஎல் போட்டி எங்களுக்கு நல்ல பயிற்சியாக இருந்தது என்பதே உண்மை. ஆனால், ஐபிஎல் இரவு விருந்து மற்றும் தொடர்ச்சியான பயணங்களால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர். முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாட முயற்சித்தோம். எங்களது சில வியூகங்கள் பலனளிக்கவில்லை. இன்னும் 20 ரன் கூடுதலாக அடித்திருந்தால் இலங்கையை வென்றிருக்கலாம். கடைசிகட்ட ஓவர்களில் அதிக ரன் குவிக்க முடியாமல் போய்விட்டது. சிறந்த அணியையே தேர்வு செய்திருந்தோம். வீரர்கள் தங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்தாததே தோல்விக்கு காரணம். பவுன்சர் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறுவதும் பின்னடைவாக அமைந்துவிட்டது. இலங்கை அணி எல்லா வகையிலும் சிறப்பாக விளையாடியது.

கிரிக்கெட் வாரிய அதிகாரி கண்டனம்:
டோனி யின் கருத்துக்கு கிரிக்கெட் வாரிய நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்ளும்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. டோனியின் கருத்து அபத்தமானது.

கபில்தேவ்:
டோனியின் கருத்து ஆச்சரியம் அளிக்கிறது. ஒரு வீரராகவும், ஒரு கேப்டனாகவும் டோனி தோற்று விட்டார்.

முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி:
தோல்விக்கு இதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது என்றாலும், டோனி தலைமையில் இந்திய அணி விளையாடிய சர்வதேச போட்டித் தொடர்களிலேயே இதுதான் மோசமான தோல்வி. மிகவும் ஏமாற்றமாக உள்ளது. சில முடிவுகளில் டோனி பிடிவாதமாக இருந்தார். இனி அவர் தனது போக்கை மாற்றிக் கொள்வார் என நினைக்கிறேன். கைவசம் 9 விக்கெட் இருந்த நிலையில், கடைசி 10 ஓவரில் 73 ரன் மட்டுமே சேர்த்தது வேதனையாக உள்ளது. யூசுப் பதானை இன்னும் முன்னதாகக் களமிறக்கி இருக்கலாம்.

முன்னாள் கேப்டன் அசாருதீன்:
ஐபிஎல் பார்ட்டி, பயணங்க ளால் தோ ல்வி என்று காரணம் சொல்வதை ஏற்க முடியாது. இரவு விருந்து முக்கியமா? சிறப்பாக விளையாடுவது முக்கியமா? என்பதை வீரர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எல்லா வகை ஆடுகளங்களிலும் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்களைத் தேர்வு செய்வது அவசியம்.

முன்னாள் வீரர் மதன்லால்:
ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தோல் விக்கு சப்பைக்கட்டு கட்டுவது சரியல்ல. ஐபிஎல் பார்ட்டியால் தோல்வி என்று டோனி சொல்வது முட்டாள்தனமானது. உலக கோப்பையை வெல்வதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி, அதில் சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை.

முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மானி:
பயணக் களைப்பை காரணமாகச் சொல்லி தப்பிக்க முடியாது. வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகமோ, அதற்கான உழைப்போ இந்திய வீரர்களிடம் சுத்தமாக இல்லை.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget