பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, இந்த இடத்தில் ‘பொன்’ என்பது செல்வத்துக்கான அதிபதி குருவை குறிக்கும். ஜாதகத்தில் குருவின் பலம் இருப்பதைவிட புதன் பலமாக இருக்க வேண்டும் என்பதையே சூசகமாக குறிப்பிட்டுள்ளனர்.
கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். எந்த ஒரு விஷயத்தையும் கண்ணால் பார்த்தவுடன் அதை கையால் செய்வதற்கு புதன் அனுக்ரகம் வேண்டும். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நன்கு படித்தவர்கள் கைநிறைய சம்பளம் வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம். நம் வாழ்க்கைக்கு அடிப்படையான கல்விச் செல்வத்தை வழங்குபவர் புதன். சொல்லாற்றல், மதிநுட்பம், சமயோஜித பேச்சு, வழக்குரைத்தல், கணக்கு, ஆடிட்டிங், பத்திரிகை, ஜோதிடம், வான சாஸ்திரம் ஆகிய துறைகளுக்கும் மூளை, நரம்பு மண்டலம் போன்ற மிக முக்கிய உறுப்புகளையும் கட்டுப்படுத்துபவர் புத பகவான்தான். அவர் அருள் இருந்தால் இத்துறைகளில் சிறந்து விளங்கலாம்.

புதனின் அம்சங்கள் (ஆதிக்கம்)

கிழமை: புதன்

தேதிகள்: 5, 14, 23.

நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி

ராசி: மிதுனத்தில் ஆட்சி & கன்னியில் உச்சம்

நிறம்: பச்சை

ரத்தினம்: பச்சை மரகதம்

தானியம்: பச்சைப்பயறு

ஆடை: பச்சை
புதனுக்கு உண்டான எண்கள் கொண்ட தேதிகள், நட்சத்திரம், ராசி ஆகியவற்றில் பிறந்தவர்கள் கல்வி, கலை, எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். மேலும் லக்னம், 2, 4, 5, 7, 9 போன்ற ஸ்தானங்களில் புதன் சுப பலம் பெற்றிருந்தால் புதன் அனுக்ரகம் நிச்சயம் உண்டு.
புதனுக்கு உண்டான எண்கள் கொண்ட தேதிகள், நட்சத்திரம், ராசி ஆகியவற்றில் பிறந்தவர்கள் கல்வி, கலை, எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். மேலும் லக்னம், 2, 4, 5, 7, 9 போன்ற ஸ்தானங்களில் புதன் சுப பலம் பெற்றிருந்தால் புதன் அனுக்ரகம் நிச்சயம் உண்டு.


பிறந்த லக்னமும் புதன் தரும் யோகமும்:
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் எந்த வகையான யோகங்களை தருவார்?
மேஷ லக்னம்/ராசி & புதன் முழு பலத்துடன் இருந்தால்தான் நல்ல யோகங்கள் கிடைக்கும். சகோதரர்களால் சாதகங்கள் உண்டு.
ரிஷப லக்னம்/ராசி & சொல்லாற்றல், எழுத்துத்துறை, கலை, இலக்கிய துறைகளில் வெற்றி, குழந்தைகளால் யோகம்.
மிதுன லக்னம்/ராசி & கல்வியில் உயர்வு. எல்லா கலைகளிலும் தேர்ச்சி அடையும் யோகம். நிலபுலன்கள், பூர்வீக சொத்துகளால் யோகம். கம்ப்யூட்டர் துறையில் சாதனை படைக்கும் வாய்ப்பு.
.
சிம்ம லக்னம்/ராசி & கலை, இலக்கியம், சொல்லாற்றல் போன்றவற்றில் யோகம்.


கன்னி லக்னம்/ராசி & கல்வி, கலை, வித்தைகள், கம்ப்யூட்டர், கணக்கு, பெரிய அளவிலான வணிக நிறுவனங்கள் மூலமாக அதிர்ஷ்டம்.

துலா லக்னம்/ராசி & கல்வி, ஆராய்ச்சி, பெரிய நிறுவனங்களை நிர்வகித்தல், பெரிய பதவிகள்.

தனுசு லக்னம்/ராசி & வெளிநாடு செல்லும் யோகம். ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் முதன்மை பெறும் வாய்ப்பு.

மகர லக்னம்/ராசி & சகல பாக்யங்களும் உண்டாகும். ஆராய்ச்சி துறைகளில் சாதனை படைப்பீர்கள்.

கும்ப லக்னம்/ராசி & எல்லா துறைகளிலும் ஏற்றம்.

மீன லக்னம்/ராசி & கல்வி, கேள்வி ஞானம் உள்பட சகல விஷயங்களிலும் சிறந்து விளங்குவீர்.

எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் புதன் நீச்சம் பெறாமலும், 6, 8, 12&ம் இடத்திலும் 6, 8, 12&ம் அதிபதிகளுடன் சேராமல் இருக்க வேண்டும்.

வழிபாடு, பரிகாரம்:
மதுரையில் மீனாட்சி அம்மன் புதனாகவே அருள்பாலிக்கிறார்.
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் இருக்கும் திருவெண்காடு புதன் தலமாகும். பிரம்ம வித்யாம்பாள் சமேத ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் அருள்பாலிக்கும் இத்திருத்தலத்தில் தனி சன்னதியில் புத பகவான் காட்சி தருகிறார்.
நவதிருப்பதிகளுள் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும்.
‘ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்தோ புத பிரசோதயாத்’
 என்ற புத காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். ‘ஓம் மம் ஹ்ரி உம் சிவ புத தேவாய நம’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
பச்சைப் பயறு வேகவைத்து பசுமாட்டுக்கு வழங்கலாம். புத பகவானின் திருவருள் கிடைத்தால் கல்வியில் மாணவர்களுக்கு நாட்டம் ஏற்பட்டு அதிக மதிப்பெண்களை குவிப்பார்கள்.
                                                                                               அன்புடன் ஜோதிடர் மதி

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget