மனைவி அமைவதெல்லாம்... என்ற பாடலுக்கேற்ப, அன்பான மனைவி அமைந்தால், பக்காவாத நோய் ஆபத்து குறையும் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஷீபா மெடிகல் சென்டர் பேராசிரியர் யூரி கோல்ட்போர்ட் தலைமையில், இல்லற வாழ்வுக்கும் பக்கவாத நோய் பாதிப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடந்தது. நடுத்தர வயதுள்ள 10,059 இஸ்ரேல் அரசு ஊழியர்கள் ஆய்வில் பங்கேற்றனர். 34 ஆண்டுகள் (1963 முதல் 1997) கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
நாட்டின் இறப்பு பதிவேடு மற்றும் பல்வேறு மருத்துவ ஆய்வக அறிக்கைகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில், பக்கவாத நோயால் இறந்தவர்களில் 64 சதவீதம் பேர் திருமணமாகாத ஆண் மற்றும் அன்பான மனைவி அமையாத ஆண்கள் என்பது தெரிய வந்தது.
இல்லற வாழ்க்கையை இன்பமுடன் எதிர்கொண்டவர்களுக்கு இந்த நோய் தாக்குவதற்கான ஆபத்து குறைந்திருந்தது.
‘‘பக்கவாத நோய்க்கான காரணம் குறித்து ஏற்கனவே அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவும் இதே கருத்தைத்தான் பிரதிபலித்தது.
“வாழ்க்கைத் துணையின் அரவணைப்பால் நோய் ஆபத்து குறைகிறது. மேலும் சத்தான உணவுப் பொருட்களை வழங்குவது, உடல் நலம் பாதிக்கப்படும்போது உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள உதவுவது, பரிவுடன் கவனிப்பது ஆகியவற்றில் வாழ்க்கைத் துணைவர் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதும் இதற்கு முக்கிய காரணம்’’ என அமெரிக்காவின் சவுத் கரோலினா மருத்துவ பல்கலைக்கழக டாக்டர் டேனியல் லேக்லேண்ட் தெரிவித்தார்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget