நவக்கிரகங்களில் பராக்கிரமம் அருளும் செவ்வாய்

சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம், பராக்கிரமம். வீரதீர செயல்கள், அதிகாரம் செலுத்துதல், ஆளுமை திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம் போன்ற எண்ணிலடங்கா தன்மைகள் கொண்ட கிரகம். போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, உயர் பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் போன்றவற்றுக்கான அதிபதி செவ்வாய். நம் உடலில் முக்கியமாக ரத்த சம்பந்தமான சில விஷயங்கள் சீராக இருக்க செவ்வாய் முக்கிய காரணம். போட்டி, பந்தயங்கள் உடல்திறன், சாகச நிகழ்ச்சிகள் போன்றவற்றில் புகழ் பெறவும் ரியல் எஸ்டேட், பில்டிங் கான்ட்ராக்ட், சிவில் இன்ஜினியரிங், அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள், நெருப்பு சம்பந்தமான தொழில்கள் சிறக்கவும் செவ்வாயின் அருள்கடாட்சம் அவசியம் தேவை.

செவ்வாயின் அம்சங்கள்

(ஆதிக்கம்)

கிழமை: செவ்வாய்

தேதிகள்: 9, 18, 27.

நட்சத்திரம்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

ராசி: மேஷம், விருச்சிகத்தில் ஆட்சி, மகரத்தில் உச்சம்

நிறம்: சிவப்பு

ரத்தினம்: பவளம்

தானியம்: துவரை

ஆடை: சிவப்பு

செவ்வாய்க்கு உண்டான எண்கள், கிழமை, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவரது ஆதிக்கம் பெற்று விளங்குவார்கள். லக்னம் அல்லது ராசியில் செவ்வாய் இருப்பது யோகம் தரும்.

பிறந்த லக்னமும்,செவ்வாய் தரும் யோகமும்

எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த வகையான யோகங்களை தருவார்?

மேஷ லக்னம்/ராசி & தலைமை பதவி, அதிகாரம், ஆட்சிபீடம்

ரிஷப லக்னம்/ராசி & மனைவி வழியில், கூட்டுத் தொழில் மூலம் யோகம்

கடக லக்னம்/ராசி & தொழில், பூர்வ புண்ணிய அமைப்பு, குழந்தைகளால் செல்வாக்கு

சிம்ம லக்னம்/ராசி & நிலபுலன்கள், தந்தை வழியில், பூர்வீக சொத்து மூலம், கல்வி செல்வம் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளால் யோகம்

துலா லக்னம்/ராசி & சொல்லாற்றல், மனைவி வகையில் யோகம்

விருச்சிக லக்னம்/ராசி & உயர்பதவி, ஆட்சி, அதிகாரத்தால் யோகம்

தனுசு லக்னம்/ராசி & பூர்வ புண்ணிய பலத்தின்படி யோகம். திடீர் அதிர்ஷ்டங்கள், பிள்ளைகளால் யோகம்

மகர லக்னம்/ராசி & தாய், தாய்வழி உறவுகளால் யோகம், நிலபுலன்கள், கல்வி செல்வத்தால் யோகம்

மீன லக்னம்/ராசி & பூர்வீக சொத்துகள், தந்தை வழியில், சொல்லாற்றல் மூலம் அதிர்ஷ்டம்

மற்ற லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் பலத்தை வைத்து யோகங்கள் கிடைக்கும். எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் செவ்வாய் நீச்சம், 6, 8, 12 ஆகிய இடங்களில் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேராமல் இருக்க வேண்டும்.

வழிபாடு, பரிகாரம்
எல்லா முருகன் கோயில்களும் செவ்வாய்க்கு உரிய தலங்கள்தான். பழநியில் செவ்வாயாகவே தண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவில் முக்கிய பரிகார ஸ்தலமாகும். நவதிருப்பதிகளுள் திருக்கோளூர் செவ்வாய் ஸ்தலம். சென்னை அடுத்த பூந்தமல்லியில் வைத்தீஸ்வரன் சமேத தையல்நாயகி கோயில் உள்ளது. இது செவ்வாய் பரிகார ஸ்தலமாகும்.

‘ஓம் அங்காரகாய வித்மஹே
பூமிபாலாய தீமஹி
தந்நோ குஜப் பிரசோதயாத்’
 என்ற செவ்வாய் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம் சம் சிவய அங்காரக தேவாய நம’ என 108 முறை சொல்லலாம். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் மற்றும் முருகன் துதிப்பாடல்கள் படிக்கலாம். அங்காரகன் எனப்படும் செவ்வாயை வணங்கி வழிபட்டால் கடன் தொல்லை, வறுமை, தோல் சம்பந்தமான நோய்கள் போன்றவை நீங்கி சகல யோகங்களும் வளங்களும் பெருகும்.

                                                                                                            அன்புடன் ஜோதிடர் மதி

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget