லோக்ஆயுக்தா போலீசார் நேற்று 7 அரசு அதிகாரிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துவைக்கப்பட்டிருந்த ரூ. 8கோடி மதிப்புள்ள நகை, பொருட்களை பறிமுதல் செய்தனர்.

நேற்று அதிகாலை பெல்காம், பெங்களூர், பெல்லாரி, மைசூர், ஹாசன் மற்றும் கார்வார் உட்பட் பல இடங்களில் உள்ள 7 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா எஸ்.பி. களான டிசோசா மற்றும் பிரபுதேவ் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ. 8 கோடி மதிப்புள்ள பொருட்கள், தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
எஸ்.டி தேவராஜ், தலைவர் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம், பெங்களூர்:
பெங்களூர், ஹாசன் மற்றும் மைசூரில் உள்ள இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் மேற்கொண்ட சோதனையில் ரூ. 2கோடி மதிப்புள்ள சொத்துகள்,பொருட்கள் மற்றும் தங்கநகைகள், ஆவணங்களை லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்.
நரேந்திரா கோவிந்தராயா நாயக், உதவி வன பாதுகாவலர், அங்கோலா:
அங்கோலா, கும்டா, கோகர்னா உட்பட பல இடங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள் இவர் மற்றும் இவரது மனைவி பெயரில் இருந்த தங்கநகைகள், வாகனங்கள் மற்றும் சொத்துகள் குறித்த பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ. 2கோடி ஆகும்.
லட்சுமிநாராயண செட்டி, துணை இயக்குனர், நிலப்பாதுகாப்பு ஆணையம், ஹொஸ்பேட்: பெல்லாரி, ஹொஸ்பேட்டில் உள்ள இவர் மற்றும் இவரது மனைவி பெயரில் உள்ள சொத்துகள், வைப்பு நிதிபத்திரங்கள், பங்குகள், ரொக்கம், வீட்டு பொருட்கள் மற்றும் தங்கம், வெள்ளி உட்பட ரூ. ஒருகோடி மதிப்புள்ள ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அயூப்கான் கோரி, போலீஸ் காவலர், ஹிரேபாகேவாடி, பெல்காம்: பெல்காம், ஹுக்கேரி ஆகிய பகுதிகளில் சோதனை நடத்திய அதிகாரிகள் இவரது பெயரில் மற்றும் இவரது மாமா பெயரில் இருந்த ரூ. 33லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள், வாகனங்கள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சாந்தகுமார், ஏஆர்டிஓ, ஆர்டிஓ செக்போஸ்ட் ஹும்னாபாத், பீதர்:
இவரது ரூ. 89லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் பங்குகள், வாகனங்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பெல்காம் நகரில் பல்வேறு பகுதிகளில் கைப்பற்றினர்.
தாசேகவுடா, உணவு துறை குமாஸ்தா, எலஹங்கா, பெங்களூர்:
பெங்களூர், ஆனேகல் பகுதியில் உள்ள சொத்து மற்றும் ஆவணங்கள், வாகனங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ. 90லட்சம் ஆகும்.
டி.என்.பேட்டேசுவாமையா, உதவி செயற் பொறியாளர், யஸ்வந்தபுரம், பெங்களூர்:
பெங்களூரில் பல இடங்களில் இவர் மற்றும் இவரது மனைவி பெயரில் உள்ள சொத்துகள், ஆவணங்கள் மற்றும் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டு சொத்துகளின் மதிப்பு ரூ. 60லட்சம் ஆகும்.
7 அரசு அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலங்களில் மேற்கொண்ட சோதனையில் கிடைத்த சொத்து ஆவணங்கள், தங்கநகைகள், வாகனங்கள், பங்குகள், ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை லோக் ஆயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் மொத்த மதிப்பு ரூ. 7கோடியே90லட்சத்து 6ஆயிரத்து 965 ஆகும்.

வால் பையன் கமெண்ட் : லஞ்சம் தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை

4 comments:

  1. என் பிளாக்கில் நீங்கள் பதிவு போட்டு 2 நாட்களாகியும், நெட் பிரச்னனயால் உடனே பதிலிட முடியவில்லை. மன்னிக்கவும்.
    நீங்க ஜூனியர் வால்பையன்னு சொல்லுங்க!

    சின்ன சின்னதாக நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!!

  1. அட நம்ம ஊர்க்காரரா... Orkut-ல jeans போட்ட பையன் போட்டோவை profileல் வைத்திருப்பீர்களே அது நீங்கள் தானா...

  1. NANTRI SENTHAMIL SELVI MADEM

  1. NAAN AVAN ILLAI PRABHAKARAN
    NEENKAL ARUMAIYAKA ALUTHUKIRIRKAL
    NANTRI VERAIVEL NERIL SANTHIPPOM

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget