இந்து திருமண சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாத இரண்டாவது மனைவி, கணவனிடம் ஜீவனாம்சம் கோர முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மும்பையை சேர்ந்த டிவி நடிகை சீமா பாட்டீல் (64) 1983ம் ஆண்டு நாதுராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் ஏற்கனவே திருமணமானவர். 17 ஆண்டுகள் கழித்து 1999ல் இருவரும் பிரிந்தனர். பின்னர் நாதுராம், சீமாவுடனான திருமணத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி குடும்பநல நீதிமன்றத்தை அணுகினார்.
சீமா இதை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்தார். அதில், முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகக் கூறி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக நாதுராம் மீது குற்றம் சாட்டினார். மேலும் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார். இதையடுத்து, நாதுராம் கோரிக்கையை ஏற்க மறுத்து அவரது மனுவை குடும்பநல நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், நாதுராம் வீட்டுக்கோ அலுவலகத்துக்கோ செல்ல சீமாவுக்கும் தடைவிதித்தது. அத்துடன் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியாது என்றும் கூறியது. இதையடுத்து, சீமா மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.பி.தேஷ் பாண்டே மற்றும் ஆர்.பி.சொந்தர்பால்தொடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகி உள்ளது.
‘‘இந்துக்களின் திருமணம், இந்து திருமண சட்டத்துக்கு உட்பட்டதாகும். இதன்படி செய்து கொள்ளப்படாத திருமணம் சட்டப்படி செல்லாது. இதன் அடிப்படையில் பார்த்தால், நாதுராம் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டது செல்லாது. எனவே, இரண்டாவது மனைவியான சீமாவுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியாது’’ என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

வால் பையன் கமெண்ட் : இரண்டாவது மனைவிகள் ஜாக்கிரதை
என்ன கொடுமை சார் இது

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget