ஜென்ம லக்னத்திற்கு 2 ஆம் வீடான தனஸ்தனாமானது ஒருவருடைய பண நடமாட்டத்தை பற்றி கூறுவது ,தனஸ்தனாமான 2 ஆம் அதிபதி ஆட்சி உச்சம்
பெற்றாலும் கேந்திர திரிகோண ஸ்தானத்தில் அமைய பெற்று,சுபர்சேர்க்கை பெற்றாலும் நல்ல பண நடமாட்டம் உண்டாகிறது.இத்துடன் தான காரகன் என
வர்ணிக்கப்படும் குரு பகவான் வலுவிழக்காமல் இருப்பதும் மிகவும் உத்தமம்.
பொதுவாக தனஸ்தானத்தில் பாவிகள் அமைய பெறாமல் இருப்பது உத்தமம் .
      2 ஆம் அதிபதியும் குருவும் நல்ல நிலையில் அமைய பெற்றால் நல்ல பண
நடமாட்டம் உண்டாகும்.2 ஆம் அதிபதியும் ,குருவும் வலுவிழக்காமல் இருப்பதும்
6 ,8 ,12  ஆம் வீட்டின் அதிபதிகள் மற்றும் பாதகாதிபதியின் சாரம்,சேர்க்கை ஏற்படாமல் இருப்பதும் செல்வம்,செல்வாக்கை உண்டாக்கும்.
பாதகாதிபதி மற்றும் 6 ,8 ,12 ஆம் வீட்டின் தொடர்பு வலுவாக இருந்தால் செல்வம் ,செல்வாக்கை இழக்கும் அமைப்பும்,எவ்வளவு பணம் வந்தாலும்
அதனை எதிர்பாரதவிதமாக இழக்கும் அமைப்பும் உண்டாகிறது.
    ஆக 2 ஆம் அதிபதியும் ,குரு பகவானும் பலம் பெறுவது மிகவும் நல்லது.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget