எங்கள் மீது பாயும் அமெரிக்கா அணு ஆயுதங்களைக் குவித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேல் நாட்டைக் கண்டிக்காதது ஏன் என்று ஈரான் அதிபர் அகமதிநிஜாத் கேட்டுள்ளார்.

ஐ.நா. சார்பில் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் தொடர்பான மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு பேசிய ஈரான் அதிபருக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
அகமதிநிஜாத் பேசுகையில், முதன் முதலில் அணுகுண்டை உருவாக்கி அதை பயன்படுத்தியது அமெரிக்காதான். இன்றும் கூட அது பெருமளவில் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளது. அணு ஆயுதப் பரவலை உருவாக்கியதே அமெரிக்காதான். ஆனால் மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று மிரட்டி வருகிறது.
ஈரான் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறி வரும் அமெரிக்கா, இஸ்ரேல் மீது கவனம் செலுத்தாதது ஏன். இஸ்ரேல் அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை கண்டிக்காதது ஏன்.
பிற நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை வைத்து மிரட்டுவதோடு, பயன்படுத்தவும் தயங்காத அமெரிக்கா, தொடர்ந்து ஈரானை மட்டும் சாடி வருவது வருத்தத்திற்குரியது என்றார்.
பின்னர் பேசிய ஹில்லாரி கிளிண்டன், அகமதிநிஜாத்தின் பேச்சு எதிர்பார்த்த ஒன்றுதான், வியப்பளிப்பதாக இல்லை என்றார்.

8 comments:

  1. விரிவாக எழுதுங்கள் ஜூனியர் .

  1. வாழ்த்துக்கள் வால் பையன்,வலையுல்கம் உங்களை வரவேற்கிறது.இரண்டு பதிவுகள் தான் பார்த்தேன். சொல்லவந்த விஷயம் முக்யமானது. கேபி செந்தில்சொல்வதுபோல விரிவாகவும் உங்கள் அகருத்தும் சேர்த்து எழுதலாம்.எழுதுவீர்கள்.

  1. நம்ம போலிஸ்காரரைவிட போலிக் கேஸ் போடுவதில் விண்ணர்களாயிற்றே அமெரிக்கர்கள்.

  1. தொடர்ந்து இதுபோல் செய்தி தாருங்கள் வால்ப்பையன்

  1. NANTRI MURUGANANDAM SIR

  1. NANTRI SHATHIKA MADEM

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget