ஓ‌ட்ட‌ப் ப‌யி‌ற்‌சி செ‌ய்பவ‌ர்களு‌க்கு கால‌ணி மு‌க்‌கியமான ‌விஷயமாக இரு‌க்கு‌ம். வெறு‌ம் காலுட‌ன் ‌சிலரா‌ல் ஓடவே முடியாது. ஆனா‌ல் வெறு‌ம் காலுட‌ன் ஓடுவதே ந‌ல்லது எ‌ன்று ஆ‌ய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தடகள ‌வீர‌ர்க‌ள் ஓ‌ட்ட‌ப் ப‌யி‌ற்‌சி‌யா‌ல் பெறு‌ம் சாதக, பாதக‌ங்க‌ள் ப‌ற்‌றி ஆரா‌ய்‌ச்‌சி செ‌ய்த ஹா‌ர்வ‌ர்டு ப‌ல்கலை‌க்கழக‌ம் இ‌ப்படி‌ப்ப‌ட்ட முடிவை அ‌றி‌வி‌த்து‌ள்ளது.
கு‌திகா‌ல் கொ‌ண்ட ஷூ அ‌ணி‌ந்து கொ‌ண்டு ஓடுபவ‌ர்களு‌க்கு தரையுட‌ன் ஏ‌ற்படு‌ம் உரா‌ய்வா‌ல் அ‌தி‌ர்வலைக‌ள் மூ‌ட்டு ம‌ற்று‌ம் உட‌ல் பகு‌திகளு‌க்கு கட‌த்த‌ப்ப‌ட்டு உட‌ல் வ‌லி ஏ‌ற்படு‌ம் சா‌த்‌திய‌க் கூறு‌க‌ள் இரு‌ப்பது க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டது.
கு‌திகா‌ல் இ‌ல்லாத ஷூ அ‌ணி‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் அடி‌ப்பாத‌த்‌தி‌ன் நடு‌ப்பகு‌தி வ‌ழியாக குறைவான அ‌தி‌ர்வுக‌ள் கட‌த்த‌ப்ப‌ட்டன. இதனா‌ல் உட‌ல் வ‌லி ஏ‌ற்படுவது த‌வி‌ர்‌க்க இயலாததா‌கிறது.
அதே சமய‌ம், வெறு‌ம் காலுட‌ன் ஓடியவ‌ர்களு‌க்கு எ‌ந்த‌வித பா‌தி‌ப்பு‌ம் இ‌ல்லை. இதனா‌ல் உட‌ல் வ‌லியு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
வெறும் காலுடன் ஓடுவதால் உள்ளங்கால்கள் பலமடைவதுடன்,மூளை நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget