உலகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் மும்பை தாக்குதல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. ‘இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது, மனித படுகொலையில் ஈடுபட்டது உட்பட 86 குற்றச்சாட்டுகளிலும் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் குற்றவாளி’ என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், உள்ளிட்ட பத்து இடங்களில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில், 195 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் 3 நாட்கள் இடைவிடாமல் நடந்த சண்டையில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். முகமது அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் சிக்கினான்.
பின்னர், பல கோடி ரூபாய் செலவில் சிறப்பு பாதுகாப்புகள் செய்யப்பட்ட மும்பை ஆர்தர் ரோடு மத்திய சிறையில் தனி அறையில் அவன் அடைக்கப்பட்டான். மேலும், தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவியதாக இந்தியாவைச் சேர்ந்த பாஹிம் அன்சாரி, சகாபுதீன் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு இதே சிறையில் அடைக்கப்பட்டனர்.
கசாபின் பாதுகாப்பு கருதி, ஆர்தர் ரோடு சிறை வளாகத்திலேயே சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதில், கடந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி விசாரணை தொடங்கியது. மொத்தம் 653 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கடந்த மார்ச் 31ம் தேதி விசாரணை முடிந்தது. அப்போது, மே 3ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி தகிலியானி அறிவித்தார். அதன்படி நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆர்தர் ரோடு சிறை முன்பாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்த தீர்ப்பை அறிய இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளிலும் அதிக ஆர்வம் காட்டப்பட்டது. குறிப்பாக, தீர்ப்பு எப்படி அமையும் என்பது பற்றி மும்பை மக்கள் காலை முதலே பரபரப்பாக விவாதிக்க தொடங்கி விட்டனர்.பகல் 11 மணிக்கு மேல் கசாப், அன்சாரி, சகாபுதீன் ஆகியோர் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். மதியம் 2 மணிக்கு மேல் நீதிபதி தகில்யானி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.
தண்டனை இன்று அறிவிப்பு
வால் பையன் கமெண்ட் : இந்த சம்பவம் நடந்து ஒராண்டுக்கு மேல் ஆகி விட்டது.
கசாப் துப்பாக்கியால் அப்பாவி மக்களை சுட்டு தள்ளியதை உலகமே டிவியில் பார்த்தது. ஆனால் அவன் குற்றவாளி என்று சொல்லவே நமக்கு ஒரு வருடம் ஆகி விட்டது.இன்னும் தண்டனை அறிவித்து அதை நிறைவேற்ற எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? இது தான் ஜனநாயகமா?
yes sir this is india