த்தரி வெயில் இன்று தொடங்குகிறது. சென்னைக்கு வெளியே இருப்பவர்களுக்கு அக்னி நட்சத்திரம். 28ம் தேதி வரை தொடரும். அதுவரை அதிகபட்ச வெப்பமும் அனல் காற்றும் வாட்டியெடுக்கும். ஆண்டு தோறும் மே மாதம் கத்தரி வந்து போவது வழக்கம்தான். என்றாலும், ‘போன வருஷத்தைவிட இந்த முறை வெயில் தாங்க முடியவில்லை’ என்று மக்கள் புலம்புவது வேடிக்கையான வாடிக்கை.
ஃபேன், ஏர்கூலர், ஏர்கண்டிஷனர்கள் முழுவீச்சில் இயங்குவதால் இந்த மாதம் மின்சாரத்தின் தேவை உச்சத்தை எட்டுகிறது. இதையடுத்து மின்தடையும் வோல்டேஜ் ஊசலாட்டமும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன. உலகம் வெப்பமயம் ஆவதை தடுக்க ஒவ்வொருவரும் தம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என்று பிரசாரம் நடக்கும்போதே, இப்படி மின் உபயோகத்தை உச்சத்துக்கு தள்ளுவது பெரிய முரண்பாடு.
சின்னச் சின்ன வழிகளில் உடல் உஷ்ணத்தையும் உலக வெப்பத்தையும் குறைக்க முடியும் என்பது பலருக்கு தெரியாது. மும்பையில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்கள் நூறு பேர் இது பற்றி பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு டை கட்டுவதில்லை என்ற முடிவு. ‘டை கட்டினால் சட்டைக்குள் வெப்பம் அதிகமாகிறது. டை இல்லை என்றால் அந்த அளவு சூடு தெரிவதில்லை. இதனால், அலுவலகத்திலும் வீட்டிலும் ஏர்கண்டிஷனரை அதிக குளிர் நிலைக்கு திருப்பாமல் மின்சாரத்தை சேமிக்க முடியும்; வெளியாகும் கார்பன் அளவையும் குறைக்கலாம்’ என அவர்கள் கூறுகின்றனர். இந்த கருத்துக்கு ஆதரவு பெருகுகிறது.
மும்பை நகரம் தினமும் பயன்படுத்தும் மின்சாரம் மூவாயிரம் மெகாவாட். அதில் மூன்றில் ஒரு பங்கை ஏசி மெஷின்கள் சாப்பிடுகின்றன. டை கட்டவில்லை என்றால் 18 டிகிரி செல்சியசுக்கு ஏசி ரெகுலேட்டரை திருப்ப அவசியம் வராது. இது மும்பைக்கு மட்டுமல்ல, நாடு முழுமைக்கும் பொருந்தக்கூடிய நல்ல ஏற்பாடு. சென்னையை எடுத்துக் கொண்டால், சராசரியாக குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரிக்கு கீழே இறங்குவதில்லை. எனவே ஏசியை அதற்கு மேல் வைத்தால் போதும். அதை மட்டும் செய்தாலே 20 சதவீத மின்சாரம் மிச்சமாகும். முழுக்கை சட்டை, ஷூ ஆகியவற்றுக்கும் ஓய்வு கொடுத்து வெள்ளை நிற காட்டன் சட்டை அணிந்தால் இன்னும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

3 comments:

  1. JS says:

    ஆஹா....
    வெய்யிலுக்கு ஏற்ற படம்.

  1. நன்றி திரு:சௌந்தரபாண்டியன்

  1. நன்றி திரு:J S அவர்களே

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget