3ஜி அலைவரிசை ஏலம்:
சமீபத்தில் 3ஜி அலைவரிசை மொபைல் சேவைக்கான ஏலம் எடுத்த ஒன்பது நிறுவனங்களும், அதற்குரிய கட்டணத்தை செலுத்தி விட்டன. இதன் மூலம், அரசுக்கு 67 ஆயிரத்து 719 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது; இதனால், அரசின் நிதிப் பற்றாக்குறை 15 சதவீதம் குறைந்துள்ளது.
மொபைல் சேவையில், சமீபத்தில் மூன்றாம் தலைமுறை அலைவரிசை (3 ஜி) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மிக நவீன வசதிகளுடன் கூடிய மொபைல் போன் சேவைக்கு அனுமதி தர ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ஏலம் விட்டபோது மதிப்பிட்டதை விட, இருமடங்கு தொகைக்கு முன்னணி நிறுவனங்கள் ஏலம் எடுத்தன. பாரதி, வோடபோன், ரிலையன்ஸ், ஏர்செல், டாடா, ஐடியா உட்பட ஏழு தனியார் நிறுவனங்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுத்தன.
3ஜி வசதிகள் என்னென்ன?
3ஜி ஏலம் எடுத்த நிறுவனங்களால் வாடிக்கையாளருக்கு கிடைக்கும் தொழில்நுட்ப வசதிகள் என்ன தெரியுமா?
மிக நவீன ஸ்மார்ட்போன் வசதிகள் கிடைக்கும். வீடியோ போன்கள் சகஜமாகி விடும்.
வினாடிக்கு 2 மெகாபைட் அளவில் மிக அதிவேக ஆடியோ, வீடியோ டவுன்லோடு கிடைக்கும்.
வீடியோ கான்பரன்சிங் வசதிகள் இன்னும் நவீனப்படுத்தப்படும்.
டேட்டா மூலமான சேவைகளும் நவீனப்படுத்தப் படும்.
இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருமானம் 44 ஆயிரத்து 345 ரூபாயாக உயர்ந்துள்ளது; 2008 - 09 ஐ விட, கடந்த நிதியாண்டில் 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆண்டு தனி நபர் வருமானத்தை மாத வருமானமாக கணக்கிட்டால் 3,695 ரூபாயாக வரும். இந்த வருமானம் கூட இல்லாமல் பலர் இருக்கின்றனரே; அப்படியிருக்க இது எப்படி தனி நபர் வருமானமாகும் என்று நினைக்கலாம்.
தனி நபர் வருமானம், தேசிய அளவில் எல்லோரின் வருமானத்தை மொத்தமாக கணக்கிட்டு, அதை ஜனத்தொகையான 117 கோடியால் வகுத்து கணக்கிடப்படுகிறது. மத்திய அரசின் புள்ளியியல் துறை இதை ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடுகிறது. கடந்த 2008 & 09ல், தனிநபர் வருமானம் ரூ.40,141 ஆக இருந்தது. கடந்தாண்டு 43 ஆயிரத்து 749 ஆக உயரும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், அதையும் தாண்டி விட்டதற்கு காரணம், கிராமப்புற தொழிலாளர்களின் வருமானம் உயர்ந்ததுதான் . மத்திய அரசு அமல்படுத்தி வரும் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாள் கண்டிப்பாக வேலை உண்டு; ஒருநாள் வேலைக்கு 100 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இதுதான் தனிநபர் வருமானம் உயர காரணம் என்று தெரியவந்துள்ளது.
செபி அங்கீகரித்த சான்றிதழை பெற்ற ஏஜென்ட்கள் மட்டுமே மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீட்டாளர்களை சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியமான ‘செபி’ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, செபியால் அமைக்கப்பட்டுள்ள தேசிய பங்கு மார்க்கெட் கல்வி நிறுவனத்தில் (என்ஐஎஸ்எம்) சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே இனி, மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீட்டாளர்களை சேர்க்க முடியும். பொய்யான லாபத்தைக் கூறி மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் மக்களை சேர்த்து நஷ்டம் அடையச் செய்வோரைத் தவிர்க்கவே இந்த விதிமுறை என்று செபி அறிவித்துள்ளது.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் தொடர்புடைய நபர், விநியோகஸ்தர், ஏஜென்ட் உட்பட யாரும் ஜூன் 1 முதல் என்ஐஎஸ்எம் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே முதலீட்டாளர்களை திட்டங்களில் சேர்க்க முடியும். எனினும், இதற்கு முன் இந்திய மியூச்சுவல் பண்ட் கூட்டமைப்பால் ஆலோசகர்களாக தேர்வு பெற்றவர்கள் தொடர்ந்து முதலீட்டாளர்களை திட்டங்களில் சேர்க்கலாம் என்று செபி கூறியுள்ளது.
நிதி நிபுணர்கள் கூறுகையில், முதலீட்டாளர்களுக்கு தரமான சேவை அளிக்க இந்த விதிமுறை உதவும். மியூச்சுவல் பண்ட் ஏஜென்ட்களாக தகுதி பெறாமல் செயல்படுவோரை தடுக்க இது சரியான நடவடிக்கை என்று கூறினர். மியூச்சுவல் பண்ட்கள் பற்றி மக்களுக்கு ஆர்வம் ஏற்படுத்த செபி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பங்கு சந்தை நிலவரம்:
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் நேற்று 373 புள்ளிகள் சரிந்தது.
பொருளாதார மந்தநிலையில் இருந்து மீளும் வேகம் குறையும் என்ற அச்சத்தால் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் சரிவுடன் நேற்று தொடங்கின. அதைப் பின்தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளிலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்றனர். சென்செக்ஸ் 373 புள்ளி சரிந்து 16,572ல் முடிந்தது. நிப்டி 116 புள்ளி சரிந்து 4,970 ஆனது.
இன்றைய தினம் பங்கு சந்தைகள் ஊசலாட்டத்துடனே இருந்து வந்தன.
ஆனாலும் நல்ல GTP DATA ,இந்திய நிறுவனங்களின் Q4 RESULTS நன்றாக உள்ளது.
மற்றும் பருவமழை இந்த ஆண்டு நன்றாக இருக்கும் என்ற பல காரணங்களால்
முதலீட்டார்கள் மத்தியில் நல்ல நம்பிக்கை ஏற்பட்டு பங்குசந்தைகள் உயர்வுடனே
முடிந்தன. இன்றும் ஐரோப்பிய பங்குசந்தைகள் சரிவுடன் தொடங்கிய போதும்
இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. இன்று இரவு அமெரிக்க பங்குசந்தைகள்
ஏற்றத்துடன் முடிந்தால்,நாளை நமது பங்கு சந்தைகள் நிபிட்டி 5100 வரை உயர
வாய்ப்புள்ளது.அமெரிக்க பங்குசந்தைகள் பிளாட் ஆக முடிந்தால் நமது பங்குசந்தைகள்
பிளாட் ஆக TRADE ஆகும் .
இந்தியாவில் இருந்து ரூ.79,336 கோடிக்கு ஏற்றுமதி செய்ததில் ஏற்றுமதி வளர்ச்சி வீதம் ஏப்ரலில் 36.2 சதவீதத்தை அடைந்தது.
கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதையொட்டி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் உயர்ந்து வருகிறது. 2008ல் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக ஏற்றுமதி பாதிப்படைந்தது. இந்தியாவில் 2009 நவம்பருக்கு பின் சீரான நிலை உருவாக ஆரம்பித்தது. கடந்த ஆண்டு ஏப்ரலில் ஏற்றுமதி ரூ.58,280 கோடிக்கு நடந்ததில் 30 சதவீத வளர்ச்சியை அடைந்தது.