எரிவதை உருவினால் கொதிப்பது அடங்கும் என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். எந்த பிரச்னைக்கும் பொருந்தக்கூடிய சூத்திரம் அது. சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய உயர்நிலை கல்வி வாரியத்துக்கு இது தெரிந்திருக்கிறது. வெள்ளியன்று வெளியான அதன் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்திய கல்வித்துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது.
மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் மாணவர்களிடம் பதற்றம் தணிந்துள்ளது. 91 முதல் 100 மார்க் வரை பெற்றிருந்தால் ஏ1 என்ற கிரேடு. 81 முதல் 90க்கு ஏ2. இதே பாணியில் பி1, பி2, சி1, சி2 என இறங்கி 33 முதல் 40 மார்க் வாங்கியவர்களுக்கு 1397904493 கிரேடு கிடைக்கிறது. ஏ1 ன் மதிப்பு 10 புள்ளிகள், 1397904493 க்கு 4. மொத்த பாடங்கள் 5. ஒவ்வொரு பாடத்துக்கும் கிடைத்த புள்ளிகளை கூட்டி ஐந்தால் வகுத்தால் சராசரி கிரேடு பாயின்ட் தெரியும். அதை ஒன்பதரையால் பெருக்கினால் வரும் சதவீதத்தின் அடிப்படையில், 11ம் வகுப்புக்கான அட்மிஷன் லிஸ்ட் தயாரிக்கப்படுகிறது.
ஒரு மார்க்கில் ரேங்க் இழப்பு என்ற டென்ஷன் இனி இல்லை. தன்னைவிட குறைவாக அல்லது அதிகமாக மார்க் வாங்கியவர்கள் யார் என்று பார்த்து அற்ப மகிழ்ச்சி அடையவோ பொறாமைப்படவோ யாருக்கும் வாய்ப்பில்லை. ‘100 வாங்கிய நானும் வெறும் 91 பெற்ற அவளும் ஒரே கிரேடு என்பது அநியாயம்’ என்று சிலர் குமுறலாம். ஏழு தொகுப்புகளில் எல்லோரும் அடங்கிவிடுவதால் பிரிவினை தோற்றம் மட்டுமல்ல, சிந்தனையும் காலப்போக்கில் காணாமல் போய்விடும். 33க்கு கீழே வாங்குபவர்களை இ1, இ2 என வகைப்படுத்துகின்றனர். ஃபெயிலானவர்கள் என சொல்லாமல், ‘அதிக மார்க் வாங்க திரும்பவும் தேர்வு எழுதும் தகுதி படைத்தவர்கள்’ என்று அவர்களை குறிப்பிடுவது கைதட்டி பாராட்ட தூண்டும் நாகரிகமான நடவடிக்கை. அப்படி 5 வாய்ப்பு தரப்படுமாம்.
போட்டி நிறைந்த உலகம் என்று சாக்கு சொல்லி குழந்தைகளை எந்திரங்களாக உருமாற்றி வருகிறோம். இந்த கொடுமைக்கு முடிவு வராதா என்று நல்லவர்கள் ஏங்கினர். அதை தீர்க்கும் முதல் நடவடிக்கையாக வந்திருக்கிறது மத்திய கல்வித் துறையின் சீர்திருத்தம். இனிமேல் 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என்ற அறிவிப்பும் கவனத்துக்குரியது. மாநிலங்கள் பின்பற்ற முன்வந்தால் நாடு சிறக்கும்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget