FREE LIVE TRADING TIPS : www.tradersfirst.blogspot.com
 கம்பெனிகளில் மக்கள் பங்கு 25 சதவீதம் கட்டாயம்:
பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட கம்பெனிகளில் பொதுமக்களின் பங்குகளை 25 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்துள்ளது.
இதனால், அடுத்த சில ஆண்டுகளில் பங்கு வெளியீடுகள் அணிவகுத்து வரும். இந்த உச்சவரம்பால் பங்குச் சந்தையில் ரூ.2 லட்சம் கோடி திரளும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அரசு, தனியார் கம்பெனிகளின் மொத்த பங்குகளில் பொதுமக்களின் முதலீடு 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1957ம் ஆண்டின் செக்யூரிடிஸ் கான்ட்ராக்ட்ஸ் (ரெகுலேஷன்) சட்டத்தில் திருத்தம் செய்து அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
புதிய விதிமுறையின்படி பங்குச் சந்தையில் ஏற்கனவே பட்டியலிடப்பட்ட கம்பெனிகளில் பொதுமக்களின் குறைந்தபட்ச பங்கு 25 சதவீதமாக இருக்க வேண்டும். அதைவிட குறைவாக உள்ள கம்பெனிகள் ஆண்டுக்கு 5 சதவீதம் என்ற வகையில் அதை அமல்படுத்த வேண்டும்.
இனி, புதிய பங்கு வெளியிடும் கம்பெனிகள், பொது மக்களின் பங்காக 25 சதவீதத்தை பராமரிக்க வேண்டும். எந்த கம்பெனியிலாவது பொதுமக்களின் பங்கு 25 சதவீதத்துக்கு கீழே குறைந்தால், அதை ஓராண்டு காலக்கெடுவுக்குள் மீண்டும் உயர்த்த வேண்டும். தவறினால், அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசின் பெரிய நிறுவனங்களான என்எம்டிசி, என்எச்பிசி, தனியார் நிறுவனங்களான விப்ரோ, டிஎல்எப் உட்பட பலவற்றில் பொதுமக்கள் பங்கு 25 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது. 29 அரசு நிறுவனங்கள், 179 தனியார் நிறுவனங்களில் இந்நிலை காணப்படுகிறது.
புதிய விதியின்படி, அடுத்த சில ஆண்டுகளில் அந்நிறுவனங்கள் குறைந்தபட்சம் 5 சதவீத பங்குகளை பொதுமக்களிடம் விற்றால் ரூ.2 லட்சம் கோடி திரட்ட முடியும். அரசும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.
மேலும், பொதுமக்களின் பங்கு அதிகரிப்பதால் கம்பெனிகளின் பங்கு விலை நியாயமாக நீடிப்பதுடன், பங்குச் சந்தை வர்த்தகத்தில் அதிக முதலீட்டாளர்கள் பங்கேற்க வழி ஏற்படும். 
 கர்நாடகாவில் ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு:
கர்நாடகாவில் ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு செய்ய நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள் உறுதி அளித்துள்ளனர். இதன்மூலம் 2.25 லட்சம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கர்நாடக அரசு சார்பில், பெங்களூரில் கடந்த வியாழனன்று தொடங்கிய 2 நாட்கள் சர்வதேச முதலீட்டாளர் சந்திப்பு நேற்று நிறைவடைந்தது. 400 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3.5 லட்சம் கோடி முதலீட்டை ஈர்ப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். இதன்மூலம் 6.5 லட்சம் பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும் என்பது அரசின் கணிப்பு.
இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் உலகின் 5வது கோடீஸ்வரரும் ஸ்டீல் தொழிலதிபருமான லட்சுமி மிட்டல், விப்ரோ நிறுவனர் அசீம் பிரேம்ஜி, குமார் மங்கலம் பிர்லா, ஷஷி ரூயா, கிரிஸ் கோபாலகிருஷ்ணன், விஜய் மல்லையா, வேணு சீனுவாசன் உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். 
செல்போனில் விளம்பரம்:
மூன்றாம் தலைமுறை தொழில்நுட்ப செல்போன் சேவையை மேலும் 9 நிறுவனங்கள் விரைவில் தொடங்குவதால், செல்போனில் விளம்பர வர்த்தகம் பல மடங்கு உயரப் போகிறது.
3ஜி சேவையை அரசு போன் நிறுவனமான பிஎஸ்என்எல் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. இப்போது மேலும் 9 முன்னணி நிறுவனங்கள் 3ஜி சேவையை அளிக்க ஏலம் எடுத்து, மொத்த ஏலத் தொகை ரூ.67,700 கோடியை அரசுக்கு செலுத்தி விட்டன.
இதையடுத்து, அந்நிறுவனங்கள் 3ஜி தொழில்நுட்ப செல்போன் சேவையை அறிமுகம் செய்யத் தயாராகி வருகின்றன. அது செயல்படத் தொடங்கி விட்டால், வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும். 3ஜி சேவையில் வீடியோ ஒளிபரப்பு சாத்தியம் என்பதால், விளம்பர நிறுவனங்கள் குஷி அடைந்துள்ளன.
டிவியில் வரும் விளம்பரங்களை இனி செல்போனில் ஒளிபரப்பும் வசதி கிடைக்கும். எனவே, செல்போன் விளம்பர மார்க்கெட் பல மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிகிறது. ஏற்கனவே இது ரூ.115 கோடியாக உள்ளது. அது அடுத்த ஓராண்டில் ரூ.500 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படு கிறது.

பங்குசந்தை நிலவரம் :
வெள்ளிகிழமையுடன் முடிந்த பங்குசந்தைகள் நல்ல ஏற்றதுடன் முடிந்துள்ளன.
ஆனாலும் வெள்ளிகிழமை அன்று அமெரிக்க பங்குசந்தைகள் பெரும் வீழ்ச்சியை
சந்தித்துள்ளன. அதன் தாக்கம் நமது பங்குசந்தையில் திங்கள்கிழமை அன்று
எதிரொலிக்கும் என்பதால் முதலீட்டார்கள் கலக்கத்தில் உள்ளனர் .
நிபிட்டி 60 முதல் 70 புள்ளிகள் வரை இழக்கும் வாய்ப்புள்ளதால் முதலீட்டார்கள்
கவனத்துடன் செயல்படவும். தற்போது நடைபெற்று வரும் ஜி 20  நிதி அமைச்சர்கள்
மாநாட்டில் யுரோப் மற்றும் கிரீஸ் பற்றிய முக்கிய முடிவுகள்(திங்கள்கிழமை) எடுக்கப்படும் என்பதால்,
திங்கள் கிழமை நமது பங்குசந்தைகளில் ஒரு நிலையற்ற தன்மை காணப்படும் .

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget