மாதவிலக்கு நின்ற பெண்கள் எடை குறைந்து ஒல்லியாக சோயா பீன்ஸ் உதவும்.
மாதவிலக்கு நின்ற பெண்கள் பல்வேறு ஹார்மோன் கோளாறுகளால் குண்டாகி விடுகின்றனர். அவர்களது உடலில் கொலஸ்டிரால் அதிகரித்து மனஅழுத்தம், இதய நோய் பாதிப்புகளுக்கு வழி ஏற்படுத்துகிறது. 40ஐ கடந்த பெண்களின் உடலில் சோயா பீன்ஸ் செய்யும் மாற்றங்கள் குறித்து தீவிர ஆராய்ச்சி நடந்தது. மாதவிலக்கு நின்ற பெண்கள் உடல்நலனுக்கு சோயா பீன்ஸ் பல அற்புதங்களைச் செய்வது அதில் தெரிய வந்துள்ளது. 40ஐ தாண்டிய பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைந்து விடுவதே கொலஸ்டிரால் அதிகரிக்கக் காரணமாகிறது.
சோயா பீன்சில் ஈஸ்ட்ரோஜனுக்கு இணையான பொருட்கள் அதிகம் இருப்பதால், அது பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைவை ஈடுகட்டி விடும். அதனால், கொலஸ்டிரால் குறைந்து உடல் எடை சரியும்.
40ஐ கடந்த பெண்கள் சோயா உணவுகளை அதிகம் சேர்ப்பதால் எடை குறைவதுடன், அதிக கொலஸ்டிரால் காரணமாக ஏற்படக்கூடிய மனஅழுத்தம், இதய நோய்களையும் தவிர்க்க முடியும்.
“சோயா உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்த பெண்களிடம் எடுக்கப்பட்ட ஸ்கேன் சோதனையில், அவர்களது அடிவயிற்றுப் பகுதியில் சேர்ந்திருந்த கொழுப்பின் அளவு 7.5% குறைந்திருந்தது. சோயா உணவைச் சாப்பிடாத பெண்களிடம் இது 9% அதிகமாக இருந்தது”