இந்தியாவில் பல பள்ளிகள் தண்டனைக் கூடங்களாகத்தான் உள்ளன. பள்ளிக்கு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து போக வேண்டும். ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது. மிரண்டு, அரண்டு, அழுது, ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கடுமையான முகத்தோடும் பிரம்போடும் நிற்கும் சில ஆசிரியர்களே இதற்கு காரணம்.
பள்ளியில் குழந்தைகளை வதைக்கும் பல சம்பவங்கள் சென்னையிலும் நடந்திருக்கின்றன. பரீட்சை அட்டையால் ஒரு வாத்தியார் சிறுவனின் மண்டையை பிளந்திருக்கிறார். பிரம்படியில் ஒரு சிறுமியின் கண் பாதிக்கப்பட்டு இருக்கிறது. டீச்சர் திட்டியதால் மனம் உடைந்து ஐந்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து இறந்த பரிதாபமும் நடந்திருக்கிறது. குழந்தை மனோவியல் பற்றி அரிச்சுவடி அளவுக்குக்கூட அறிவில்லாத ஆசிரியர்களின் மூர்க¢கத்தனத்தால் நடக்கும் சம்பவங்கள் இவை. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர்களை உடல்ரீதியில் துன்புறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் இவர்களுக்கு தெரியாது.
கொல்கத்தாவில் பிரின்சிபால் அடித்ததால் 13 வயது பள்ளி மாணவன் ஒருவன் சமீபத்தில் தற்கொலை செய்திருக்கிறான். தேசிய அளவில் இப் பிரச்னை சர்ச்சையாகி இருக்கிறது. இதுதொடர்பாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையத்தின் (என்சிபிசிஆர்) தலைவர் சாந்தா சின்காவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் சந்தித்து பேசியுள்ளார்.
‘சிறுவர்கள் விலைமதிக்க முடியாத சொத்து. தேசத்தின் எதிர்காலம் அவர்களிடம்தான் உள்ளது. பள்ளிகளில் குழந்தைகளை அடித்து துவம்சம் செய்வதன் மூலம் இந்த சொத்தை நாசப்படுத்தி விடக்கூடாது’ என கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் மாணவர்களை அடித்து துன்புறுத்துவதை தடுககும் வகையிலஎன்சிபிசிஆர் 2007ல் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டிருககிறது. ஆனால் மாணவர்கள் உதைபடுவதை தடுக¢கும் அளவுக¢கு இதன் விதிகள் போதுமானதாக இல்லை. இனி கடுமையான வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டுவரப்படும் என கபில்சிபல் கூறியிருக்கிறார்..
நவீன காலத்தின் இந்த காட்டுமிராண்டி செயலை தடுப்பதற்கு இது அத்தியாவசியம்

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget