live trading tips visit www.tradersfirst.blogspot.com
கடந்த 9 வர்த்தக தினங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் ரூ.1,576 கோடியை முதலீடு செய்துள்ளதாக செபி புள்ளி விவரம் கூறுகிறது.
இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிறுவன முதலீடு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இந்திய பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இவை இருந்து வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், கடந்த மாதத்தில் இந்திய பங்குச் சந்தை முதலீடுகளை வெளிநாட்டு நிறுவனங்கள் திரும்பப் பெற்றன. இதனால் கடும் சரிவு ஏற்பட்டது.
இப்போது, அவர்கள் பங்குகளை அதிக அளவில் வாங்கி வருவதால் பங்குச் சந்தை உயர்ந்து வருகிறது. இந்த மாதத்தில் இதுவரை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் ரூ.19,173 கோடிக்கு பங்குகளை வாங்கி உள்ளனர். எனினும், ரூ.17,596 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.
இதையடுத்து, கடந்த 9 வர்த்தக தினங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் நிகர முதலீடு ரூ.1,576 கோடியாக உள்ளது.
கடந்த மே மாதத்தில் ரூ.9,436 கோடி மதிப்பிலான பங்குகளை அவர்கள் விற்றனர். இது இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் விற்கப்பட்ட அதிகபட்ச தொகையாகும்.
எனினும், கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 11 வரையிலான வெளிநாட்டு நிறுவன நிகர முதலீடு ரூ.22,145.5 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் ரூ.83,400 கோடியை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.