கடவுளை நெருங்கி விட்டானா மனிதன்? ஆம், கடவுள் மட்டுமே சில அபூர்வ செயல்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கைக்கு நடுவே, அதேபோன்ற செயல்களை அறிவியல் பூர்வமாக சாதித்து வருவதில் விஞ்ஞானிகளின் பங்கு அதிகம்.

அந்த வகையில், பல ஆண்டாக மேற்கொண்ட ஆய்வில் ஒரு மகத்தான சாதனையை அமெரிக்காவை சேர்ந்த மரபணு வல்லுனர் கிரேக் வென்டர் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர். மனித பிறப்பில் இருந்து வாழ்க்கையில் கடைசி வரை செயல்படுவதில் ஜீன் மற்றும் க்ரோமோசோம்களுக்கு முக்கிய  பங்கு உண்டு. பல லட்சம் செல்களை கொண்ட இவை தான் வாழ்க்கையில் பெரும் பங்காற்றுகிறது.
இந்த வகையில், முதன் முதலில் செயற்கை செல் (சிந்தடிக் செல்) கண்டுபிடித்துள்ளனர் இந்த விஞ்ஞானிகள். இந்த செயற்கை செல்களால், மரபணுவை மாற்ற முடியும்; தேவைக்கேற்றபடி செயல்படுத்த முடியும். இயற்கையான செல்கள் போல, மனித உடலில் பங்காற்ற முடியும்.
இதன் பலன்கள் அளவிட முடியாது; சுருங்கச்சொன்னால், மனிதனை, அவன் வாழ்க்கையை முழு ஆரோக்கியமாக மாற்றி விட முடியும். அதாவது, செயற்கை வாழ்க்கையை உருவாக்க முடியும். இத்தனை ஆண்டுகளில் முதல் புரட்சி சாதனை இது தான். மனிதன், இயற்கை இடையே உள்ள இடைவெளியை நாங்கள் தகர்க்க இன்னும் பல மைல் செல்ல வேண்டும்’ என்கிறார் வென்டர்.
சாதனையில் இந்தியர் பங்கும் உண்டு. 24 பேர் கொண்ட வென்டர் குழுவில், சஞ்சய் வாஜி, ராதா கிருஷ்ணகுமார், பிரசாந்த் பார்மர் ஆகிய மூன்று இந்திய வம்சாவளி இந்தியர் உள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயம்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget