மேஷம்:
மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது வேலை அமையும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக் கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
ரிஷபம்:
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றி பெறும் நாள்.
மிதுனம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத் தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
கடகம்:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கணவன்,மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். பூசம் நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
சிம்மம்:
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.
கன்னி:
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சகஊழியர்கள் மதிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.
துலாம்:
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். சொந்த,பந்தங்கள் தேடி வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.
விருச்சிகம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
தனுசு:
சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.
மகரம்:
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. சகோதரி உதவுவார். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்
கும்பம்:
எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.
மீனம்:
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத் தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.