மேஷம்:

நட்பால் ஆதாயம் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

ரிஷபம்:
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மிதுனம்:
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.

கடகம்:
இரவு 8 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல் லும். ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வாகனம் தொந்தரவு தரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

சிம்மம்:
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இரவு 8 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

கன்னி:
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். உற்சாகமான நாள்.

துலாம்:
பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்:
கணவன்,மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆனால், கேட்டை நட்சத்திரக் காரர்களுக்கு டென்ஷன் வந்து போகும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மகிழ்ச்சி தங்கும் நாள்.

தனுசு:
இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பார்த்த காரியங்கள் அலைச் சலின் பேரில் முடியும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறி பேச வேண்டாம். லேசாக தலை வலிக்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

மகரம்:
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். தெய்வீக ஈடுபாடு அதி கரிக்கும். தாயார் ஆதரித்து பேசு வார். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். இரவு 8 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்:
குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

மீனம்:
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். ஆனால், ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதுமை படைக்கும் நாள்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget