மேஷம்:
இரவு மணி 7.36 வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். பிள்ளைகளால் செலவுகள் வரும். முன்கோபத்தை குறையுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
 
ரிஷபம்:
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். இரவு மணி 7.36 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முன் யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.
 
மிதுனம்:
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.
 
கடகம்:
பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சொந்தபந்தங்களின் அன்புத் தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.
 
சிம்மம்:
பழைய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு கை, கால் வலி வந்து நீங்கும். புது வேலை அமையும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
 
கன்னி:
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத் யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.
 
துலாம்:
கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப் பொலிவுக் கூடும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
 
விருச்சிகம்:
இரவு மணி 7.36 வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து நீங்கும். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச் சுமை அதிகரிக்கும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைபார்க்க வேண்டி வரும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
 
தனுசு:
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். உறவினர் களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். இரவு மணி 7.36 முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
 
மகரம்:
நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவரை சந்திப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
 
கும்பம்:
உணர்ச்சிகளை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்.
 
மீனம்:
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உறவினர்களுடன் இருந்த அதிருப்தி விலகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

1 comments:

  1. manithanukku raci yetharkku...

    உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget